‘கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா’ – ரசிகர்கள் செயலால் கமெண்ட் பகுதியை ஆப் செய்த நாய் சேகர் குழு.

0
233
naai
- Advertisement -

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலரை பார்த்து நெட்டிசன்கள் போட்ட கமெண்டை படக்குழுவினர் ஆப் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இவர் தமிழில் ரஜினி,கமல்,விஜய்,அஜித், சத்யராஜ்,பிரபு,விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம்:

அந்த வகையில் தற்போது வடிவேலு அவர்கள் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் இருந்தது. ஆனால், அதே டைட்டில் சதீஷ் கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி இருந்தது. இதனால் வடிவேல் உடைய படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆக மாறியது. இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தின் டிரைலர்:

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை வடிவேலுவே பாடியிருக்கிறார். மேலும், இந்த படம் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது.

ட்ரைலரை கலாய்த்த நெட்டிசன்கள்:

அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ட்ரைலர் அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது. ட்ரெய்லரில் எந்த ஒரு இடத்திலுமே சிரிப்பு வரவில்லை. காமெடி என்று வடிவேலும் அவருடைய கூட்டாளிகளும் எதையெதையோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்று டிரைலரை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ்களை போட்டிருந்தார்கள். அதுமட்டும் நெட்டிசன்கள் படத்தை பங்கமாக கலாய்த்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். இதனால் அந்த கமெண்ட் பகுதியை படக்குழு ஆப் செய்து இருக்கிறார்கள். ‘கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா’ என்பது போல தான் இருக்கிறது.

Advertisement