மகேஷ் எல்லாம் என் ஜோக்க கேலி செஞ்சார், நிஷா எல்லாம் இப்படி பேசி தான் பேமஸ் ஆனா – பல உண்மைகளை சொன்ன Kpy சசிகலா

0
942
KpySasikla
- Advertisement -

தற்போது இணையத்தில் டிரென்ட் ஆகிகொண்டு இருக்கும் நாளை எல்லாம் நலம் தானே பாடல் இனையத்தில் பரவி வருகிறது. இந்த பாடலில் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் அந்த பாடலை பாடியவர் கலா மாஸ்டர் தான். இந்த படலை எழுதியவர் பாடலாசிரியர் தாமரை அவர்கள் தான். இந்த பாடலின் அனுபவம் குறித்தும் தன்னுடைய வாழ்கையில் நடைபெற்ற இன்னல்களை பற்றியும் அதில் நடனமாடிய KPY சசிகலா பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

பாடல் கூறித்து பேசியது:

இந்த பாடல் தற்போது டிரென்ட் ஆகி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடல் வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது. இந்த பாடலுக்கு தான் நான் வாழ்கையில் முதன் முதலில் நடனம் ஆடினேன். ஆனால் அந்த படம் சரியான வரவேற்ப்பு கிடைக்கததால் நான் அந்த படத்தில் நடித்தேன் என்பதை கூறவேவில்லை.

- Advertisement -

சசிகலா கூறியது:

சசிகலா கூறுகையில் “நான் சாதாரண ஜெயன்ட் ஜோசப் கல்லூரியில் படித்தேன். என்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கவில்லை அந்த கவலையிலே அப்பா இறந்து விட்டார். நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன் ஆனால் என்னுடைய கணவர் கொஞ்சம் சோம்பேறி. நான் எப்போதும் தூங்க வேண்டும் என்று நினைக்க மாட்டேன். அடுத்து என்ன செய்வதென்று சுறு சுறுப்பாக இருப்பேன். இன்று 10 ரூபாய் சம்பாதித்தல் நாளை 100 ரூபாய் சம்பாதிக்க பார்ப்பேன். ஆனால் எனது கணவர் 100 ரூபாயை 10 மாத்திவிடுவார்.

அது போல் வீட்டில் எனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் வந்தது ஆனால் என்னுடைய் குழந்தைகளை பார்த்ததும் எனக்கு தற்கொலை எண்ணம் வரவில்லை. நான் அதன் பின் மீண்டும் ஒரு முறை தற்கொலை செய்ய வேண்டும் என்று ரயிலே ட்ராக்கில் நின்றேன் அப்போது அங்கு இருவர் வந்தனர். அதில் ஒருவருக்கு கை ஒன்று இல்லை மற்றொருவருக்கு கால் ஒன்று இல்லை அவர்களிடம் ஒரு குழந்தை கூட இருந்தது. அவர்களே கஷ்டப்பட்டு வளர்கிறார்கள் நானும் M.Com படித்து இருக்கேன் நாம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் என்று எண்ணம் வந்தது. ஆனால் அப்போது (1996) ரேஷன் அரிசி கிலோ 2 ரூபாய்” என்று கூறினார்.

-விளம்பரம்-

KPY 2 பற்றி பகிர்ந்த சசிகலா:

திருவிக நகர் திரைப்படம் வெளியானது பிறகு தான் நான் KPY 5 சீசனில் கலந்து கொண்டேன். அப்போது தான் தீனா, நிஷா எல்லாம் அந்த சீசனில் தான் இருந்தார்கள். நான் ஆரம்பத்தில் புதிய புதிய காமெடிகளை செய்து விட்டேன். ஆனால் நிஷா 10 வருடங்களுக்கு முன் வந்த காமெடிகளை சொல்லி கலக்கி வந்தாள். நிஷா என்னைவிட சின்ன பெண் தான். அவர் எதாவது ஒரு வார்த்தை கூறினால் அதற்க்கு ஏற்ற போல் காமெடிகளை செய்து வந்தார். ஆனால் நான் நிறைய புதிய காமெடிகளை தயார்செய்து வந்தேன். ஆனால் நிஷாவை விட நவீன் திறமையானவர்.

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கூறியது:

KPY 5 பிறகு எனக்கு அதிகம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படி வந்த வாய்ப்புக்களில் அதிகம் வெளிப்படையாக அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தான் கேட்டார்கள். ஆனால் நான் அதற்க்கு பட்டிமன்றத்தில் பேசி பிழைத்து கொள்வேன், பாத்திரம் கழுவி பிழைத்து கொள்வேன், வேறு எதாவது வேலை செய்து பிழைத்து கொள்வேன் என்று கூறினேன். ஒரு போதும் அதுமாறி செய்ய மாட்டேன் என்று கூறினேன். ஆனால் ஊடகங்களில் என்ன நடக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது என்று கூறினார்.

Advertisement