36 வருடங்களுக்கு முன்பு கமலுடன் விக்ரம் படத்தில் நடித்த நடிகை – கமலுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ. எப்படி இருக்கார் பாருங்க.

0
1118
vikram
- Advertisement -

36 வருடங்களுக்கு பிறகு கமலுடன் விக்ரம் படத்தில் நடித்த கதாநாயகியின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டு காலமாக கொடி கட்டி பறப்பவர் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவின் ஐகான். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது கமல் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. மேலும், நடிகர் சூர்யாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளார்கள்.

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங்ஸ்டர். அதனால் அவர் ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க பார்க்கிறார்.

விக்ரம் படம் குறித்த தகவல்:

இதனால் கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மே 15ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் முதல் பாடல்:

அதில் கமலின் வரி மற்றும் குரலில் பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் சென்னை தமிழில் பாடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆனால், அதில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே..என்று மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் பாடலில் இடம்பெற்றிருக்கிறது என்று கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் கமலஹாசன் நடித்த நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விக்ரம் பட கதாநாயகி:

கமலஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் விக்ரம். இந்த படத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் உண்டு. மேலும், இந்த படத்தினை மையமாக வைத்து தான் தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் படத்தை இயக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கமலஹாசனின் விக்ரம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை லிசிஸி. இவர் தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் உடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வியப்பில், பழைய விக்ரம் பட புகைப்படத்தை பதிவிட்டு இந்த கதாநாயகி நீங்க தானா! என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

Advertisement