அதே தூண், அதே மாடி, அதே கதவு, ஆனால் – ரசிகர்களை தெளிவாக குழப்பிவிட்ட ரக்ஷிதாவின் பதிவு.

0
2038
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகியதாக செய்திகள் பரவியது. ரக்ஷிதா தற்போது கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் ரக்ஷிதாவோ, நான் சீரியலில் இருக்கேனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை.

இதையும் பாருங்க : இத்தனை ஆண்டுகளில் ARஐ மீசையோடு பார்த்திருக்கீங்களா ? முதல் முறையாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

- Advertisement -

அதனால் நீங்கள் இயக்குனரிடம் கேட்டு சொல்லுங்கள் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாவில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ செட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள ரக்ஷிதா, அதே தூண், அதே மாடி, அதே கதவு, அதே வீடு! ஆஹா மறுபடியுமா?எங்கேயும் போகலை… இன்னும் இங்கேயே தான் இருக்கேன். ஆனா, இல்லை. சில வதந்திகளுக்காக நான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் இருந்து விலகியதாக சொல்ல முடியாது.

போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆச்சுன்னா பார்த்துக்கலாம். அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க! இதை ஒரு பெரிய செய்தியாக்குறதுனால எந்த பயனும் இல்ல. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ விட்டு போறேன்… போறேன்னு சொல்லி சொல்லி என்னை நீங்களே போக வைச்சிடுவீங்க போலயே! நமக்கு அடி ஒன்னும் புதுசில்லையே… பார்க்கலாம் என்ன தான் நடக்குதுன்னு! சப்போர்ட் பண்ண நீங்க எல்லாம் இருக்கீங்களே எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று கமல் போன்று புரிந்து புரியாதவாரும் பதிவிட்டு குழப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement