இத்தனை ஆண்டுகளில் ARஐ மீசையோடு பார்த்திருக்கீங்களா ? முதல் முறையாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

0
2274
arr
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹமான். 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், இவர் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் தான்.

-விளம்பரம்-

ஆனால், இவரை ஒரு இசை கலைஞராக அறிமுகம் செய்தது என்னவோ பிரபல இசைமைப்பாளர் ஆர் கே அர்ஜுனன் தான்.1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் அவர்கள் ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் கீ போர்டு வாசிக்க ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார். இதுவே ஏ.ஆர்.ரகுமான் சினிமா உலகில் நுழைய காரணமாக இருந்தது.

இதையும் பாருங்க : முத்து சிற்பியை தொடர்ந்து பைனலுக்கு முன்னேறிய அந்த 3 பேர் – இந்த வாரம் வெளியேறிய நபர் யார் தெரியுமா ?

- Advertisement -

அதன் பின்னர் ஏ ஆர் ரஹ்மான் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார். ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து தான். இவரது இயற் பெயர் திலீப் குமார். 20 வயதில் தன் தந்தையின் இறப்பிற்கு பின்னர் முஸ்லிமாக மாறினார் ஏ ஆர் ரஹ்மான். அதற்கு முக்கிய காரணம் அவரின் தாய் தான்.

முஸ்லிமாக மாறிய பின்னர் முஸ்லீம் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். ஏ ஆர் ரஹ்மான், பல ஆண்டுகளாக மீசை தாடி எதுவும் வைக்காமல் எப்போதும் கிளீன் ஷேவ் லுக்கில் தான் இருப்பார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ZoomMeeting app பில்டரை பயன்படுத்தி மீசை வைத்து இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் பல விதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement