மீண்டும் ஒரு சினிமா டைடலில் ஒரு சீரியல் – அதுவும் கமல் படம். களமிறங்கிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.

0
756
reshmi

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். இதில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராஷ்மி. இப்படி ஒரு நிலையில் இவருக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் முடிந்துள்ளது. நடிகை ராஷ்மிக்கு கடந்த நவமபர் 27 ஆம் தேதி ரிச்சு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது சென்று கொண்டு இருந்தாலும் முதல் பாகத்தில் வந்த ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகளையும் நீக்கியது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியாக்கியது. . வெளிமாநிலங்களில் இருந்து படப்பிடிப்புக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், ரக்‌ஷாவும், ராஷ்மியும் மாற்றப்பட்டனர். இப்படி ஒரு நிலையில் நடிகை ராஷ்மி ஜெயராஜ் மீண்டும் விஜய் டிவி சீரியலில் களமிறங்கி இருக்கிறார்.

கமல் நடித்த  ராஜபார்வை படத்தின் பெயர் தான் இந்த சீரியலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ராஜபார்வை படத்தில் வருவது போல இந்த சீரியலிலும் ஹீரோ ஒரு பார்வையற்ற நபராக நடிக்கிறார். இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி சந்திரலேகா தொடரின் நாயகன் முனாஃப் ரஹ்மான் ஹீரொவாக நடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement