திடீரென்று முடிவுக்கு வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2, கடைசி நாள் ஷூட்டில் கேக் கொண்டாடிய நடிகர்கள் – சோகத்தில் ரசிகர்கள்

0
667
naam
- Advertisement -

திடீரென்று கேக் வெட்டி கடைசி நாள் சூட்டிங்கை முடித்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். மேலும், இந்த தொடர் நன்றாக தான் சென்றது. பின் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் விலகி இருந்தார்கள். இதனால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு வேறொரு கதை களத்தில் அதே பெயரில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில்குமார் அவர்கள் மாயன், மாறன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்:

இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறார். இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பானதிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் முதலில் மகா கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். பின் திடீர் என்று ரக்ஷிதா சீரியலில் இருந்து விலகி விட்டார். இது குறித்து அவர் விளக்கமும் கொடுத்து இருந்தார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் 2:

அதே போல் இந்த சீரியலில் மகா ரோலில் அரண்மனை கிளி சீரியலில் நடித்த நடிகை மோனிஷா நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியல் 1040 எபிசோடுகளை வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது. தற்போது சீரியலில் பாண்டி, சரண்யாவை திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமணத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், சரண்யாவை திருமணம் செய்து கொள்ள இருந்த நபர் சரண்யாவின் தப்பான புகைப்படங்கள் வீடியோவும் வைத்து பிளாக் மெயில் செய்கிறார்.

-விளம்பரம்-

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதை:

பின் எப்படியோ பாண்டி அவனிடமிருந்து சரண்யாவை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் பாண்டியின் தாய் தன்னுடைய மகன், மகளின் வாழ்க்கையை நினைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறார். சரண்யா பாண்டியை ஏற்ப்பாளா? மாறன் திருந்தி தன்னுடைய அண்ணனுடன் சேர்ந்து இருப்பாரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது இந்தநிலையில் சீரியல் முடிவடையப் போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிவு:

இந்நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங், கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நாடகத்தில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராஜீவ் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸுக்கு பின் இவரை இன்னும் காட்டவில்லை. கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் மீண்டும் கத்தி கதாபாத்திரம் என்றி உடன் சீரியலை முடிப்பது போல தெரிகிறது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

Advertisement