அரங்கத்தில் அப்பாவை நினைத்து கண் கலங்கிய செந்தில். சோகத்தில் ஆழ்ந்த நடிகர்கள்.

0
6205
senthil
- Advertisement -

‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் செந்தில். தற்போது நடிகர் செந்தில் அவர்கள் தன்னுடைய அப்பாவை நினைத்து அரங்கத்தில் கண்கலங்கி உள்ளார். அதை பார்த்து சக நடிகர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி ஆனார்கள். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சி ஆக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”. இந்த சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் செந்தில். மேலும், சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. அதோடு சின்னத்திரையில் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்தனர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு செந்தில் அவர்களுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சினிமா படங்களில் பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார். பின்னர் மீண்டும் தன் மனைவியுடன் இணைந்து இவர் ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் “நாம்-இருவர்-நமக்கு-இருவர்” என்ற தொடரில் நடிக்கிறார். அதுவும் இந்த தொடரில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியல்.

இதையும் பாருங்க : இரண்டாம் குழந்தைக்கு தாயான அறந்தாங்கி நிஷாவின் வளைகாப்பு. வீடியோ இதோ.

- Advertisement -

மேலும், இந்த சீரியலில் நடிகர் செந்தில் அவர்கள் ‘மாயன் (ரவுடி), அரவிந்த் ( மருத்துவர்)’ என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் செந்திலுக்கு தந்தையாக நடிப்பவர் நடிகர் அழகு. இவர் இந்த சீரியலில் குஸ்தி அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு காலத்தில் சினிமா உலகில் வில்லனாக கொடி கட்டி கலக்கியவர். தற்போது இவருக்கு 75 வயதுக்கு மேலாகியும் சினிமா துறையில் இருந்து விலகாமல் தன்னுடைய நடிப்புத் திறமையை காண்பித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 500 நாட்கள் கடந்து உள்ளது என்பதற்காக வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார்கள். இந்த விழாவிற்கான புரோமோ காட்சிகள் டிவி, சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் செந்தில் ப்ரோமோவில் கூறியது, சீரியலில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது உண்மையிலேயே எனக்கு அவரைப் பார்த்தால் அப்பாவாக தான் நினைக்க தோன்றுகிறது. அதோடு நான் அப்பாவாக தான் நினைத்து நடிக்கிறேன். அது மட்டும் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய தந்தை இறந்து விட்டார். அவரைப் போலவே இவர் இருக்கிறார். இவரை நான் அப்பா என்று கூப்பிடும் போதெல்லாம் எனக்கு என் அப்பா தான் நினைவுக்கு வருகிறார் என்று கண்கலங்கிய படி கூறி உள்ளார். இதை பார்த்து சக நடிகர்களும் கண் கலங்கினர். பின் நடிகர் அழகு அவர்கள் இனி மேல் உன்னை நான் மகன் தான் என்று கூப்பிடுவேன் என்று கூறினார். பிறகு மேடையே கண்ணீர் கடலில் மூழ்கியது என்று சொல்லலாம்.

Advertisement