படம் ஹிட்டா, இல்ல 10 வருஷம் கழித்து பேசப்படுமா ? ‘நானே வருவேன்’ – முழு விமர்சனம் இதோ.

0
1222
naane
- Advertisement -

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புடன் வெளியான தனுஷின் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

கதைக்களம்:

படத்தில் தனுஷ் அவர்கள் ஒட்டி பிறந்த இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு, கதிர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். படத்தில் கதிர் வழக்கமான பிள்ளைகளைப் போல இல்லாமல் சிறு வயதில் இருந்து வித்தியாசமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவருடைய பெற்றோர்கள் கதிரை ஒரு கோயிலில் விட்டு விடுகிறார்கள். பிரபுவை மட்டுமே அவர்களுடன் வைத்து வளர்க்கிறார்கள். பல வருடங்கள் கழித்து பிரபுவுக்கு அழகான மனைவி, அன்பான மகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார்.

அப்போது பிரபு தனுஷின் மகள் அடிக்கடி தனியாக பேசுகிறார். அவரிடம் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய மகள் மீது ஒரு ஆவி இருப்பதை தனுஷ் கண்டுபிடிக்கிறார். அந்த ஆவியிடம் தனுஷ் பேச முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆவி தனுஷ் இடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் தான் உன் மகளை விட்டுப் போவேன் என்று சொல்கிறது. தனுஷும் அதை செய்ய துணிகிறார். அந்த ஆவி அப்படி என்ன செய்ய சொன்னது? தனுஷ் ஆவி சொன்னதை செய்தாரா? தன் மகளை மீட்டாரா? குழந்தையில் விடப்பட்ட கதிர் தனுஷ் என்ன ஆனார்? என்பதை படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு ரோலில் தனுஷ் சாந்தமான அப்பாவாகவும், தன் மகளுக்காக துடிக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக நடித்து இருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர் கதாபாத்திரத்தில் தனுஷ் கொடூர வில்லனாக மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க தனுசை சுற்றியே நகர்கிறது. படத்தில் தனுஷின் மகளாக நடித்து இருப்பவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மேலும், படத்தின் முதல் பாதி கான்ஜுரிங் படம் போல திரில்லிங்காக சென்று கொண்டிருக்கிறது.

பின் இடைவெளி காட்சி அற்புதமாக இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் தான் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்று சொல்லலாம். படத்தில் தனுஷ் உடைய நடிப்பு சூப்பர். ஆனால், கதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். முதல் பாதியில் இருந்த பரபரப்பும், திரில்லிங்கும் இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதி வில்லன் தனுஷால் மட்டுமே கதை நகர்கிறது. படத்திற்கு பக்க பலமாக ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இருக்கிறது.

இடைவெளி காட்சியில் பேயை கண்டுபிடிக்கும் இடத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை பார்வையாளர்களை உறைய வைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் பெரிதாக வசனங்கள் எதுவும் காண்பிக்கவில்லை. தனுஷ் உடைய நடிப்பிற்கே படத்தை பார்க்கலாம். மொத்தத்தில் படம் சுமாரான படமாக இருக்கிறது.

பிளஸ்:

தனுஷ் உடைய நடிப்பு அற்புதம்.

படத்தின் முதல் பாதி சூப்பர்.

இடைவெளி காட்சி சிறப்பு.

பின்னணி செய்யும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

மைனஸ்:

இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதத்தில் கவனம் செலுத்திருக்கலாம்.

இரண்டாம் பாதியில் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் அற்புதமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் தனுஷின் நானே வருவேன் படம் – கெத்து காட்டி இருக்கிறது.

Advertisement