தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகில் அமைந்துள்ள ஊர் கிராமம்தான் காளியாபுரம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நகைச்சுவை காட்சி,சண்டைக் காட்சி, பாடல் காட்சி என அனைத்தும் இந்த குறிப்பிட்ட இந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.1970 களில் இருந்தே இந்த இடத்தில் காட்சிகள் எடுக்கபடுகிறது.
இந்த ஊரில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் காட்சியை சொன்னாலே உங்களுக்கு இந்த இடம் ஞாபகம் வந்துவிடும் அப்பேர்ப்பட்ட காட்சி அது. நாட்டாமை படத்தில் ஒரு விதமான பேக்ரௌண்ட் மியூசிக்குடன் சரத்குமாரும் டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள் அல்லவா? அந்த படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரது கண் முன்னர் வந்து போவார். அந்த டீச்சரின் உண்மையா பெயர் தான் ரக்சா.
நாட்டாமை காட்சி :-
1992ல் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ரக்சா. கவுண்டமணி “இந்த ஆளு டீச்சர் வச்சிருக்கான் டோய்” என்ற நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலமானது அது எங்க தான் எடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நினைத்தாலே இனிக்கும் படத்தின் பன்னாரஸ் பட்டு வேட்டி அந்த படத்தின் பாடல் இங்கு தான் எடுக்கப்பட்டது. இதே இடத்திலேயே பூமி படத்தில் சரண்யாவும் ஜெயம் ரவி இட்லி கடை போட்டு சாப்பிடும் அந்த காட்சி எடுக்கப்பட்டது.
இங்கு எடுக்கப்பட்ட பிரபலமான காட்சிகள் :-
கவுண்டமணி செந்தில் நடிப்பில் வெளிவந்த come on டைகர் இன்று புலியேயவேட்டையாட செல்லும் கஅந்த காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டது. அஜித் படத்தில் ஜன கன மன அந்த பாடல் காட்சியும் இங்கு எடுக்கப்பட்டது தான். எல்கேஜி படத்தில் இரு வெவ்வேறு கட்சிகள் ஓட்டு கேட்டு வரும்பொழுது சந்தித்துக் கொள்ளுமாறு இருக்கும் அந்த காட்சியும் இதே இடத்தில் எடுக்கப்பட்டது தான்.
அதிகளவில் ஷுட்டிங் எடுப்பதற்கு காரணம் :-
சிம்பு நடித்த காளை படத்தின் கடைசியில் வரும் சண்டைக் காட்சிகள் அதுவும் இங்கு தான் படம்பிடிக்கப்பட்டது இப்படி இந்த இடத்தில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. எதற்காக பல திரைப்பட காட்சிகள் இங்கு வந்து எடுக்கப்படுகின்றது அதற்கு ஒரே காரணம்தான் நல்ல சுற்றுப்புற சூழலுடன் இயற்கை அழகுடன் மனிதர்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடம் என்ற காரணம் தான். எங்க ஷூட்டிங் எடுக்கும் போது பெரிதளவில் தொந்தரவு இருக்காது கூட்டம் சேராது இது போன்ற காரணங்களினால் தான் குறிப்பாக இந்த கிராமத்தில் அதிக அளவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.