பல கனவுகளோடு திருமணம் பண்ணேன், விவாகரத்து ஆகும்னு கொஞ்சமும் நான் எதிர்பார்க்கலை – வேதனையை பகிர்ந்த நாதஸ்வரம் சீரியல் நடிகை.

0
1308
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகின்றது. அதிலும் சன் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக திகழ்வது நாதஸ்வரம். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரில் பலர் நடித்தும் இருந்தார்கள். இந்த தொடர் குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது. இந்த தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், இந்த நாதஸ்வரம் தொடரில் காமுவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பென்ஸி பிரிங்க்ளின்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் கல்யாண வீடு என்ற தொடரிலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பென்ஸி பிரிங்க்ளின் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனமாடுவது ரொம்ப பிடிக்கும். பரதநாட்டியம், குச்சிப்புடி எல்லாம் முறையாக கற்றுக் கொண்டேன். என்னோட அப்பாவுக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்கணும் என்ற ஆசை. அவர் இந்தியன் பேங்க் மேனேஜர் ஆக இருந்தாலும் கூட ஆடிசனுகளுக்காக பல இடங்களுக்கு போவார். அப்படிப் போகும்போது ஒரு முறை என்னையும் அவர் அழைத்துக் கொண்டு போனார்.

- Advertisement -

பென்ஸி அளித்த பேட்டி:

அங்கே என்னை பார்த்துவிட்டு ஒருத்தர் குழந்தையாக சீரியலில் நடிக்க பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி தினமும் முகத்திற்கு தயிர் போட சொல்லி அட்வைஸ் பண்ணினார். அப்ப நான் 6 ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்னைக்கு தான் என்னுடைய மீடியா பயணம் தொடங்கியது. எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆறாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு செய்தேன். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் கலந்துகொண்டு செலக்டட் ஆனேன். எனக்கு கிளாசிகல் மட்டும்தான் தெரியும். வெஸ்டர்ன் தெரியாது என்பதால் நான் கத்து கொண்டேன். அப்போது என்னுடைய உடலை குறித்து பலரும் விமர்சனம் செய்து பேசி வந்தார்கள்.

பென்ஸி மீடியா வாழ்கை:

இருந்தாலும் நான் என்னுடைய முயற்சிகளை கை விடவில்லை. வசந்தி டிவியில் ஆங்கரக பயணத்தை தொடங்கி அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்க ஆரம்பித்தேன். பிறகு காலேஜ் முடித்து விட்டு டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தேன். இருந்தாலும் மீடியாவில் சாதிக்கணும் என்பது தான் என்னுடைய ஆசை. அப்பதான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. பின் திருமுருகன் சாரை மீட் பண்ணினேன். அதற்கு பிறகுதான் நாதஸ்வரம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் பல விஷயங்களை திருமுருகன் சாரிடம் கற்றுக்கொண்டேன். அப்படியே எனக்குத் திருமணமும் நடைபெற்றது. என்னுடைய திருமணம் அரேஞ்ச் மேரேஜ். நாதஸ்வரம் சீரியல் முடியும் சமயம் எனக்கு திருமணம் ஆனது.

-விளம்பரம்-

பென்ஸி விவாகரத்து பற்றிய தகவல்:

பல கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். என் வாழ்க்கையில் எனக்கு விவாகரத்து ஆகும் என்று கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை. கல்யாண வாழ்க்கையில் நல்லா இல்லையென்றால் வாழ்க்கையே வீணாகிவிடும். ஆரம்பத்தில் மெண்டலி பிரஷர் ரொம்ப இருந்தது. நான் எல்லா பெண்களிடையே சொல்வது ஒரே ஒரு விஷயம் தான். நீங்கள் என்ன படித்து இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு வேலை இருக்கணும். அதுதான் நமக்கு கைகொடுக்கும். விவாகரத்து ஆனதும் கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. ரொம்ப வலியாக இருந்தது. எனக்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்தார்கள். நான் விவாகரத்து வாங்கினால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று தயக்கம் இருந்தாலும் இதுக்கு மேல இந்த ரிலேஷன்ஷிப் தொடர முடியாது என்று என் அம்மா அப்பாகிட்ட புரியும் மாறி சொன்னேன்.

விகாரத்திற்கு பிறகு நடந்தது:

என் குடும்பமும் என்னை புரிந்து கொண்டார்கள். இப்போ இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்கவே எனக்கு பயமாக இருக்கிறது. ரொம்ப மெண்டல் பிரஷரில் இருந்தப்ப தான் கல்யாண விடு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படியே நான் என்னுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டு வந்தேன். திருமுருகன் சார் முதல் ஒட்டு மொத்த டீமும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எனக்கும் சாகுற வரைக்கும் நடிக்கணும் என்ற ஆசை. சீக்கிரமே திருமுருகன் சாருடைய புராஜெக்ட் மூலமாக எல்லோரையும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement