சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த நாதஸ்வரம் சீரியல் நடிகை – அழகிய ஜோடிகளின் புகைப்படம்.

0
1772
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோவும், இயக்குனருமான திருமுருகனின் காதலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த முதல் சிரியலிலேயே இவருக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகை கீதாஞ்சலி காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். நாதஸ்வரம் சீரியல் ஷூட்டிங் காரைக்குடியைச் சுற்றி உள்ள இடங்களில் நடந்ததால் வீட்டிலிருந்தே வந்து சூட்டிங்கில் கலந்து கொண்டார் கீதாஞ்சலி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து இவருக்கு அடுத்து அடுத்து சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

-விளம்பரம்-

இதனால் இவர் சென்னையிலேயே தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து தங்கினார். பின் கீதாஞ்சலி அவர்கள் சினிமாவில் கூட சில படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வந்த “வாணி ராணி” சீரியல் வெற்றிகரமாக முடிவு அடைந்தது. உடனடியாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான “நிறம் மாறாத பூக்கள்” என்ற சீரியலில் கமிட் ஆனார். அதே சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் கீதாஞ்சலி கமிட்டானார்.

இதையும் பாருங்க : மேடையில் பேசிக்கொண்டிருந்த மாரி செல்வராஜின் செல் போனில் ஒலித்த விஜய் படத்தின் ரிங் டோன் – வைரல் வீடியோ.

- Advertisement -

இந்த இரண்டு சீரியல்களின் சூட்டிங் நாட்கள் ஒரே நேரங்களில் நடைபெற்றதால் இரண்டு சீரியலிலும் நடிக்க சில பிரச்சனைகள் ஏற்பட்டது.மேலும், தொடர்ந்து இந்த 2 சீரியல்களில் நடிக்க பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் நடிகை கீதாஞ்சலி அவர்கள் ராஜா-ராணி-சீரியல் இருந்து விலகி விட்டார். பின் நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் மட்டும் நடித்து கொண்டு வந்தார். அதோடு சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த நிறம் மாறாத பூக்கள் தொடரும் முடிவடைந்தது.

'நாதஸ்வரம்' கீதாஞ்சலி

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கீதாஞ்சலி அவர்களுக்கு அவ்வளவாக சினிமாக்களும், சீரியல் வாய்ப்புகள் அமையவில்லை என்ற உடன் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜுக்கும் கடந்த மார்ச் 2 ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. கீர்த்தி ராஜ் இன்ஜினீயரிங் முடித்து விட்டு தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இந்த திருமணம் பெரியோர்களால் பார்த்து முடிக்கப்பட்ட திருமணமாம்.

-விளம்பரம்-
Advertisement