என்னது நடிகர் சங்க கட்டிடம் கட்டாததற்கு அஜித் காரணமா? இது என்னடா புது கதையா இருக்கு

0
589
vishal
- Advertisement -

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் நடிகர்களுக்கு என்று சங்கம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் கொடுக்கிறார்கள். இதற்காக நடிகர் சங்கத்திற்கு என்று தேர்தல் நடக்கிறது. அதில் பல நடிகர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, நடிகர் சங்கத்திற்கு என ஒரு சொந்தமாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது இன்று நேற்று இல்லை பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இன்று வரை அது நடந்து முடிந்ததா? என்பது கேள்விக்குறி தான்.

-விளம்பரம்-

மேலும், இந்த நடிகர் சங்கம் தேர்தலில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் நபர்கள் இந்த முறை நிச்சயம் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் அடுத்த வேலை என்று பல வாக்குறுதிகள் அளிக்கிறார்கள். அதற்கு பின் அவர்கள் அவர்களுடைய சினிமா படங்களில் பிஸியாகி விடுகிறார்கள். அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷாலும் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

- Advertisement -

விஷால் போட்ட சபதம் :

அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து விட்டு தான் அந்த மண்டபத்தில் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் போட்டார். அந்த சபதத்தை நிறைவேற்ற அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் செலிபிரிட்டி கிரிக்கெட். நடிகர்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி. இதை விஷால் ஏற்படுத்தி இருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நடிகர் கட்டிடத்தை கட்டி விடலாம் என்று நினைத்தார். அவர் கட்டிடம் கனவிலேயே தான் கட்டப்பட்டது. கட்டிடமும் கட்டிய பாடு இல்லை, அவருடைய திருமணமும் நடந்த பாடில்லை.

நட்சத்திர கிரிக்கெட் :

இது ஒரு பக்கமிருக்க, இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரை விஷால் அழைத்திருந்தார். ஆனால், இவர்கள் இருவருமே இந்த போட்டியில் பங்கேற்க வில்லை. ஒருவேளை இந்த போட்டியில் பங்கேற்று இருந்தால் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சாட்டிலைட் உரிமை மட்டும் பல கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் நடிகர் அஜித் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

அஜித் சொன்ன விஷயம் :

அப்படி என்ன அஜித் கூறி இருந்தார் என்றால், நாம் ஏன் மக்களிடம் பணம் பெற வேண்டும். நாமே ஒவ்வொருவரும் நமது சம்பளத்தில் கொஞ்சம் பணம் செலுத்தினால் எளிதாக கட்டிடத்தை கட்டி விடலாமே என்று கூறினார். இதனால் விஷால் உடைய மொத்த திட்டமும் மண்ணோடு மண்ணாக போய்விட்டது. அஜித் சொன்னதும் சரி தானே, நமக்கு தேவையான நடிகர் சங்க கட்டிடத்தை நாம் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் கொடுத்தாலே போதுமே இன்னேரம் கட்டிடம் கட்டி முடிந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டாமல் போனதற்கு அஜித் தான் காரணம் என்று வழக்கம் போல் அவர் மீது பழி போட்டு விட்டார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

அஜித் சொன்ன கருத்தை ஆதாரத்த ரசிகர்கள் :

இதை பார்த்த நெட்டிசன்கள், அவர் சரியாக தான் கேட்டார். இதை அரசியல் ரீதியாக நடிகர்கள் மாற்றிவிட்டார்கள். ஒவ்வொரு நடிகரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். அதில் கொஞ்சம் பணம் கொடுத்தாலே போதும். ஆனால், ஏதோ காசு கஷ்டப்படுவது போல் மக்கள் கிட்ட நிதி கேட்பது அசிங்கமா? இல்லையா? என பலரும் அஜித் கருத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அதோடு மக்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். இப்படி இருக்கும் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதரின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ஆனால், மக்கள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.

Advertisement