தனது திருமணம் குறித்து நாக சைதன்யா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:
இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் நாக சைதன்யா-சோபித்தா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:
அதோடு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்த நாள், நாக சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, அதே நாளில் சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்பி இருந்ததாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது. பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விழாவில் நாக சைதன்யா:
இந்நிலையில், சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் நடிகர் நாக சைதன்யா பங்கேற்றுக் கொண்டார். அந்த விழாவிற்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணத்திற்கு மாப்பிள்ளை அழைப்பது போல் மரியாதையுடன் காரில், மேல தாளங்களுடன் அழைத்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நாக சைதன்யாவிடம் மணமகன் உடையில் விழாவில் பங்கேற்று இருப்பது திருமணத்திற்கான ஒத்திகையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

திருமணம் குறித்து சைதன்யா:
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே 'இருக்கலாம்' என்று கூறியுள்ளார். மேலும், தனது திருமணம் எப்படி போகிறது என்பதை கூறிய நாக சைதன்யா,'கண்டிப்பாக இது ஒரு ஆடம்பர திருமணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை மனதில் வைத்து திருமணம் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். பின் திருமண தேதி, இடம் ஆகியவற்றை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.






