அல்லு அர்ஜுன் கைது குறித்து நாக சைதன்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது நாக சைதன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டேல்.
இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஏற்கனவே நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தண்டேல் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சந்தூ மொண்டேடி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
நாக சைதன்யா பேட்டி:
இந்த படம் தமிழ், தெலுங்கில் இரு மொழிகளில் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. இந்த படம் நிஜ வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாக சைதன்யாவிடம் அல்லு அர்ஜுன் கைது பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், அது துரதிஷ்டவசமாக நடந்த ஒன்று.
அல்லு அர்ஜுன் குறித்து சொன்னது:
அப்படி நடந்திருக்கவே கூடாது. ஆனால், இதுதான் வாழ்க்கை. அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று கூறி இருக்கிறார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக சினிமா கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா.
புஷ்பா 2 படம்:
இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர தேவி வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
அல்லு அர்ஜுன் கைது:
இதற்கிடையில் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்தபோது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி அநியாயமாக உயிர் இழந்த சம்பவம் அனைவரும் அறிந்தது. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே இது தான். இதற்கு காரணம், தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தது தான். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிமாக திரண்டது. இதனால் போலீஸ் அவர்களை கட்டுப்படுத்த திரண்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜினை போலீஸ் கைது செய்திருந்தார்கள். பின் இவரை சில விதிகளுக்கு உட்பட்டு தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.