அஜித் பயன்படுத்தும் பைக்கை வாங்கிய சமந்தாவின் கணவர்.! விலை எவ்வளவு தெரியுமா?

0
566
nagachaitanya

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் அஜித் சிறந்த நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு கார் மற்றும் பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது படங்களில் கண்டிப்பாக கார், பைக் போன்ற காட்சிகள் இடம்பெறாமல் இருந்தது இல்லை.

தற்போது வெளியாக போகும் விஸ்வாசம் படத்திலும் பைக் ஸ்டன்ட் செய்துள்ளார் அஜித். மேலும், அவரது வீட்டில் எண்ணற்ற விலையுயர்ந்த கார் மற்றும் பைக் கலெக்ஷன்கள் உள்ளது. இவரை போலவே தான் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் பைக் பிரியராக உள்ளார்.

இதையும் படியுங்க : அஜித்தின் மொபைல் இவ்வளவு பழைய மாடலா.! விவரம் உள்ளே..!

- Advertisement -

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவின் மகனும், சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா தனது வீட்டில் எண்ணற்ற விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய BMW பைக்கை வாங்கியுள்ளார்.

இந்த பைக்கை நம்ம அஜித் பயன்படுத்தி வருகிறார். மேலும், விவேகம் படத்தில் கூட நடிகர் அஜித் இந்த பைக்கை பயன்படுத்தி இருப்பார். இதனுடைய விலை 22 லட்சம் ருபாய். அந்த விலைக்கு இந்தியாவில் ஒரு நல்ல கார் வாங்கிவிடலாம் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement