விவாகரத்து பெற்றதற்கான காரணம் குறித்து முதன்முதலாக நாக சைதன்யா அளித்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இதனிடையே நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா-நாக சைத்தன்யா பிரிவு:
இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கஸ்டடி படம்:
இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த சாமி, வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
நாக சைதன்யா அளித்த பேட்டி:
அந்த வகையில் சமீபத்தில் நாக சைதன்யா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தன்னுடைய மனைவி சமந்தாவை பிரிந்தது குறித்து கூறியிருந்தது, நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நாங்கள் முறையாக விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிறது. நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வழங்கிவிட்டது. எங்கள் வாழ்க்கையும் நகர்ந்துவிட்டது. என் வாழ்க்கையின் அந்த கட்டத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அழகான மனிதர். அனைத்து மகிழ்ச்சிகளை பெறுவதற்கு தகுதியானவர்.
சமந்தா பிரிவு குறித்து சொன்னது:
சமூக வலைத்தளத்தில் வந்த வதந்தி காரணமாகத் தான் எங்கள் இருவர் இடையே பிரச்சனை ஆரம்பமானது. அது மெல்ல மெல்ல பெரிதாக கடைசியில் பிரிந்து போக வேண்டிய நிலைமைக்கு வந்தது. முதலில் நான் வதந்தி குறித்து அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு நிலைமைகள் மாறிவிட்டது. எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத மூணாவது நபரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.