விஜய் தேவர்கொண்டாவிடம் சமந்தா குறித்து கேட்ட நரகர்ஜுனா ? அக்கறையா ? இல்ல கேலியா ?

0
2442
nagarjuna
- Advertisement -

முன்னாள் மருமகளை நிகழ்ச்சியில் நாகர்ஜுனா நலம் விசாரித்து இருக்கும் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேபோல் இவர் தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமந்தாவின் நலத்தை நாகர்ஜுனா விசாரித்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சமந்தா- விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் குஷி.

- Advertisement -

குஷி படம்:

இயக்குனர் ஷிவா நிர்வானா குஷி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, ஜெயராம், சரண்யா கெட்டேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக விஜய் தேவர் கொண்டா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குஷி பட குழுவினர் பிரமோஷனுக்காக சென்றிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவர் கொண்டா பங்கேற்றுகிறார். அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனா தன்னுடைய முன்னாள் மருமகள் சமந்தா வரவில்லையா என்று விசாரித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான புரோமோ தான் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, சமந்தாவின் மேல் நாகர்ஜுனாவிற்கு நிறைய அக்கறை இருக்கிறது என்று பாராட்டி வருகிறார்கள். ஆனால் , அதே சமயம் சமந்தாவும் – விஜய் தேவர்கொண்டாவும் காதலிப்பதாக பரவும் வதந்திகளை குறிப்பிட்டே நாகர்ஜுனா இப்படி கேலி செய்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா-சமந்தா இருவரும் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். பின் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தென்னிந்திய சினிமா உலகில் சிறந்த ஜோடிகளாக இருவரும் திகழ்வார்கள் என்று சிறந்த எதிர் பார்த்தார்கள்.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் இவர்களுடைய விவாகரத்து குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் அதிகம் இருந்தது. இன்னும் கூட இவர்களுடைய விவாகரத்து குறித்து பல வதந்திகளும் சர்ச்சைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Advertisement