செந்தி பாலாஜியின் வழக்கில் மாறி மாறி இடைக்கால ஜாமீனை மறுக்கும் நீதிமன்றங்கள். தொடர்ந்து போராடும் செந்தில் பாலாஜியின் தரப்பு.

0
1103
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு மேலும் செப்டம்பர் 15வரை நீதி மன்ற காவலை நீடித்து சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி முத்த வழக்கறிஞர் இளங்கோவன் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதற்க்கு முதன்மை அமர்வு நீதி மன்றம் ஜாமீன் குறித்து கூறியுள்ளது.

-விளம்பரம்-

அமைச்சரின் வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க.துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

- Advertisement -

சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவலை மேலும் செப்டம்பர் 15வரை நீதி மன்ற காவலை நீடித்து சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் தாக்கல் செய்து இருந்தார். இதனை எம்.பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் முதன்மை நீதிமன்றமும் மாறி மாறி மறுப்பு தெரிவித்தனர்.எந்த நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பினர் உயர் நீதி மன்றத்தில் கேட்டார். அமலாக்க துறையின் வழக்குகளை முதன்மை அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு 2016 ஆண்டு உத்தரவிட்டது என்றனர்.

அதனால் செந்தில் பாலாஜியின் வழக்கை முதன்மை அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்திரவிட்டனர். செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. அதனால் அவர் சிறையிலே நிற்க முடியாமல் 3 மூறை கீழே விழுந்தார் அவரால் எழுந்தும் நிற்க முடியவில்லை என்று ஜாமீன் கோரி இருந்தனர். அவரது மருத்துவ அறிக்கையை பாருங்கள் அவருக்கு இடைகால ஜாமீன் வழங்க வேண்டும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

-விளம்பரம்-

அதற்க்கு அமலாக்க துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உற்று நோக்கும் வகையில் இந்த வழக்கு மாறியுள்ளது. இந்த வழக்கை முதன்மை அமர்வு நீதி மன்றம் தான் விசாரிக்க வேண்டும். இதற்க்கு இடைகால ஜாமீன் வழங்க கூடாது அமலாக்க துறை வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுங்கள் என்று கூறினார்கள். இந்த வழக்கானது நாளை முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement