படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் இவர் தான் நடித்தாராம்.! படப்பிடிப்பில் எடுக்கபட்ட புகைப்படம் .!

0
10054
padaiyappa
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் “படையப்பா”.மேலும், 1999 ஆம் ஆண்டு படையப்பா படம் தமிழ் திரை உலகில் வெளிவந்தது.அதுமட்டுமில்லாமல் படையப்பா படம் சினிமா துறை உலகில் வெளிவந்த தமிழ் படங்களிலேயே ஒரு பெரிய மாஸ் ஹிட் கொடுத்த படமாகும். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும், ஏ. எம். ரத்னம் அவர்கள் இந்த படத்தை தயாரித்தார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்தார்.

-விளம்பரம்-
Related image

மேலும், இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ், வடிவுகரசி, லக்ஷ்மி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சினிமா நட்சத்திரங்கள் கூட்டமே இருந்தது கூட சொல்லலாம்.மேலும், இந்த படம் 1996 இல் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ பட வசூலை முறியடிக்கும் அளவிற்கு ஓடியது. படையப்பா படம் திரையரங்கில் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனையும், வெற்றியையும், வசூலையும் பெற்றுத் தந்தது.இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக மறைந்த முன்னாள் நடிகை சௌந்தர்யா அவர்கள் நடித்திருந்தார்.முக்கியமாக இந்த படம் ஹிட்டாகும் அளவிற்கு காரணம் ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் தான்.

இதையும் பாருங்க : தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம்.! உள்ளே சென்ற உடனே பத்த வைத்த வனிதா.!

- Advertisement -

மேலும், இந்த புகழ்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல் ரம்யா கிருஷ்ணன் வாழ்க்கை சினிமா துறையில் உச்சத்திற்கு செல்வதற்கு இந்த நீலாம்பரி கதாபாத்திரம் தான். மேலும் ரஜினியின் சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது படையப்பா படம். ஆனால், இந்த படத்தில் நடிகை நக்மா தான் கதாநாயகியாக நடிக்க இருந்தார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. மேலும், இது குறித்து பல கருத்துக்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து கூறுகையில் இந்த படத்தில் முதன்முறையாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நக்மா அவர்கள்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

padayappa-unseen

மேலும், அவர் சிறிது நாட்கள் அந்த படத்திற்காக பணியாற்றினார். ஆனால், என்ன காரணமோ? என்னவோ? தெரியவில்லை படப்பிடிப்புக்கு அவர் வரவே இல்லை. மேலும், படப்பிடிப்பிற்கு வருவதையும் அவர் தவித்தார். அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் ரஜினிகாந்துக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகையை தேடினார். பின்னர் அவசர அவசரமாக நடிகை சௌந்தர்யா அவர்களை ஒப்பந்தம் செய்தார். இந்த படையப்பா படத்தில் சௌந்தர்யா அவர்கள் அப்பாவி பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறியது கேற்றவாறு சௌந்தர்யா அவர்கள் வேற லெவல்ல நடித்திருந்தார். தற்போது படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் நக்மா, சூப்பர் ஸ்டார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் நக்மா நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement