‘என்ன இவ்ளோ கருப்பா இருக்கு’ – உடல் பாகத்தை கேலி செய்தருக்கு நகுல் மனைவி கொடுத்த பதிலடி.

0
685
Nakhul
- Advertisement -

பாடி ஷேமிங் குறித்து பயனர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த சுருதின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். அதுமட்டுமில்லாமல் நகுல் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் பயங்கர குண்டாக இருந்தாராம்.

-விளம்பரம்-

பின் நடிப்பிற்காக இவர் தன்னுடைய உடலை குறைத்து நடிக்கத் தொடங்கினார். இதனிடையே இவர் பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளார்கள். மேலும், சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார்.

- Advertisement -

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சுருதி :

இது ஒரு பக்கமிருக்க, நகுலின் மனைவி சுருதி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். சுருதி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவ்வபோது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பல சமூக கருத்து குறித்தும் இவர் பதிவிட்டு வருகிறார். தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார்.

ஸ்ருதி பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படம்:

அதே போல நகுல் மற்றும் ஸ்ருதி இருவரும் செல்லப்பிராணிகளின் பிரியர்கள் கூட. அதனால் அடிக்கடி தங்கள் செல்லப்பிராணிகளுடன் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தன் செல்லப்பிராணியான பூனை உடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சுருதி தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் சுருதியின் அக்குள் கருப்பாக இருப்பதாக அவருக்கு மெசேஜ் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தன்னை விமர்சித்தவருக்கு சுருதி கொடுத்த பதிலடி:

அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுருதி ‘உன் எதிர்கால வாழ்க்கையை விட என்னுடைய அக்குள் பிரகாசமாக தான் இருக்கிறது. Fake ஐடியே, வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அக்குள், தொடைக்கு நடு பகுதி, அந்தரங்க உறுப்புக்கள் அனைத்திலும் மெலனோசைட்டுகள் அதிகம் சுரப்பதாலும், அந்த பகுதிகளில் காற்று எளிதாக செல்வதில்லை என்பதாலும் அந்த பகுதிகள் கருப்பாக இருக்கிறது.

திருமணத்திற்கு முன் சுருதி செய்த வேலைகள்:

அது முற்றிலும் சாதாரணமான விஷயம் தான். எனவே, உடல் கேலி செய்யும் நபர்களே நீங்கள் கருத்து கூறும் முன்னர் அதை சரிபார்த்து கொண்டு பின்னர் கூறுங்கள்’ என்று மிக கூலாக பதில் அளித்து உள்ளார். இப்படி இவரின் பதிவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சுருதி திருமணத்திற்கு முன் marketing arm of Chennai based SPI Cinemas பணி புரிந்தார். அதோடு இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், செஃப்
/ பேக்கர், விலங்குகள் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement