விஸ்வாசம் போது அஜித்தை பாராட்டிய அதே அதிகாரி. விஜய் பற்றி என்ன பேசியுள்ளார் பாருங்க. வைரலாகும் வீடியோ.

0
10085
ips-arjun
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்பவர் நடிகர் விஜய். மேலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்களில் வெளியான பிகில் படம் மாஸ் காட்டி வருகிறது. மேலும்,பிகில் படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் தான் விஜய் ரசிகர்கள் ‘விஜய் நற்பணி மன்றம்’ மூலம் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அது பேனர்,போஸ்டர் ஒட்டுவதன் மூலம் வீண் செலவு செய்வதை விட விஜய் நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்து ஒரு புது விஜய் நற்பணி மன்றத்தை நடத்தி வருகிறார்கள். இது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்திய நாட்டின் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன் அவர்கள் தளபதி விஜய் இடம் தான் நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன் என விஜய்யை புகழ்ந்து தள்ளிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்படி என்ன? செயலுக்குக்காக ஐபிஎஸ் அதிகாரி விஜய்யை பாராட்டி உள்ளார் என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய அளவில் நடந்த விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த பெண்களுக்கு பாராட்டும் விதமாக ஒரு விழா நடந்தது. மேலும்,இந்த விழாவை விஜய் நற்பணி மன்றம் சார்பில் நடந்தது. இந்த பாராட்டு விழாவில் திரு. அர்ஜுன் சரவணன் ஐபிஎஸ் அதிகாரி அவர் கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில் தேசிய அளவில் நடந்த விளையாட்டுத் துறையில் பங்கு பெற்று வெற்றி பெற்ற 50 வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அப்போது அர்ஜுன் சரவணன் அதிகாரி அவர்கள் கூறியது, நற்பணி செய்யும் விஜய் ரசிகர்களை பார்த்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நற்பணிகள் என்றென்றும் தொடர நான் வாழ்த்துகிறேன். மேலும்,விஜய் அவர்கள் நடித்த முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’. இந்த படம் வெளியான முதல் நாளே பிரபல பத்திரிக்கையில் இந்த மூஞ்சி எல்லாம் படத்தில் நடிக்க வந்து இருக்கு கலிகாலம் என்று விமர்சனம் செய்தார்கள்.

இதையும் பாருங்க : தினமும் 12 மாத்திரை சாப்பிட்டேன், இதுனால அதையும் விட்டுட்டேன். இலியானாகா இந்த நிலை.

இப்படி அவரைக் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அப்போது எழுந்தது. ஆனால், அவர் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் தன்நம்பிக்கை உடன் போராடினர். மேலும், பத்து வருடம் கழித்து அதே பத்திரிக்கை நிறுவனமே விஜய் அவர்களிடம் சென்று எங்கள் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு போட்டோ ஷூட் செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்டார்கள். மேலும், உங்க போட்டோவை எங்க பத்திரிக்கை அட்டையில் போட்டா 5 லட்சம் விற்கிற எங்கள் பத்திரிகை 10 லட்சம் அளவுக்கு விற்கும் என்று கூறினார்கள். மேலும்,அந்த பத்திரிகை நிறுவனம் விஜய் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டார்கள். அதன் பின் விஜயும் போட்டோ ஷூட் செய்து கொடுத்தார்.

-விளம்பரம்-

இது தான் ஒரு மனிதனின் உண்மையான வெற்றி. யாரொருவர் நம்மை கேவலமாக எண்ணி பேசுகிறார்களோ, அவர்கள் மத்தியில் நன்றாக வாழ்ந்து காட்டுவதே ஒரு மனிதனின் வெற்றி. மேலும், நம் வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து காட்டுவது தான் நம் எதிரிக்கு கொடுத்த தண்டனை. அதோடு இந்த விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் நான் விஜய்யிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும், அவர் பேசும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே, இவர் விஸ்வாசம் படத்தின் போது அஜித்தை பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement