என் லவ்வர் என்ன அடச்சு வெச்சு இருக்காரா ? ஸ்ரீநிதி வீடியோவிற்கு பின் நக்ஷத்திரா வெளியிட்ட வீடியோ.

0
571
sreenidhi
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீப நாட்களாக சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருபவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. சமீபத்தில் வெளியான வலிமை படத்தை கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களிடம் வாங்கிகட்டிக்கொண்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-627.jpg

இதை தொடர்ந்து சிம்பு தன்னை காதலிப்பதாக புதிய சர்ச்சையை கிளப்பி இருந்தார். மேலும்,’நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு என்று கூறி இருந்தார். இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் பலர் இவரை திட்டி தீர்த்து வந்தனர். இதற்கு பதில் அளித்த ஸ்ரீநிதி ‘ ‘என்னிடம் Str குறித்து கேட்பதற்கு பதிலாக ஏன் நீங்கள் அனைவரும் என்னை பற்றி அவரரிடம் கேட்கமாற்றீங்க. நான் பொய் சொல்லவில்லை.

இதையும் பாருங்க : செல்வராகவன் – மோகன் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது – போஸ்டரில் இருக்கும் இதிகாசத்தின் புத்தகம்.

- Advertisement -

சிம்பு குறித்த சர்ச்சை :

சமூக வலைதளத்தில் தான் நான் உண்மையாக இருக்கிறேன். அவரை பற்றி எந்த பேட்டியையையும் நான் கொடுக்க மாட்டேன். அவரே கொடுக்கட்டும். என்னை விட்டுவிட்டு அவரை கேளுங்கள்’ என்று கூறி இருந்தார். ஸ்ரீநிதியின் செயல்களை கண்டு பலரும் ஸ்ரீநிதியை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், இவருக்கு எதோ மனநல பாதிப்பு இருக்கிறது என்றும் இவர் அடுத்த மீரா மிதுன் என்றும் கூறி வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-584-1024x805.jpg

தன் நெருங்கிய தோழி குறித்து ஸ்ரீநிதி ;

இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியான நட்சத்திராவைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை தற்போது நீக்கியும் இருந்தார் ஸ்ரீநிதி. ஆனால், அந்த வீடியோ பெரும் வைரலானது. அதில் பேசிய ஸ்ரீநிதி ‘நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது.

-விளம்பரம்-

என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க :

நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோழியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசிய ஸ்ரீநிதிக்கு மனநலம் முற்றிவிட்டது என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். 

நக்க்ஷத்ரா வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நக்ஷத்ரா ‘நான் என்னமோ பிரச்சனையில் இருக்கிறேன். நான் லவ் பண்ண பையன் பேமிலி என்ன பிடிச்சி வச்சி இருக்காங்கன்னு சொல்றது எல்லாம் பொய். அவ எதோ மன அழுத்தத்தில் இருக்கிறார். அவள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். அவள் என்மீது உள்ள அக்கரையில் அப்படி செய்துகொண்டு இருக்கிறாள். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன் ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement