பிரபல தமிழ் நடிகரையை ஏமாற்றிய flipkart நிறுவனம்..!மக்களே உஷார்..!

0
161
Nakulflipkart

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் “பாய்ஸ்”. முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மூலம் 4 நண்பர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் நகுல். இன்று ஒரு பெயர் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக இருந்து வருகிறார்.

நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மத்துடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் நடிகர் நகுல் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எதாவது பரிசளிக்கலாம் என்று நினைத்துள்ளார். இதனால் பிரபல ஆன் லைன் நிறுவனமான flipkartல் 1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார் நகுல். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அது போலியான ஐ போன் என்று தெரியவந்துள்ளது. இதனால் flipkart சேவை மையத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க மறுத்ததால் ட்விட்டர் பக்கத்தில் புலம்பியுள்ளார் நகுல்.