இந்தியாவுக்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள் – சீமான் சொன்ன காரணம்.

0
1183
- Advertisement -

மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்று திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்தியாவில் நடக்க இருந்தது.  ஜி 20 மாநாடு மாலை விருந்து அழைப்பிதழில் President of ‘Bharat’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது இது தான் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியது.

-விளம்பரம்-

சீமான் கூறியது:

மத்திய அரசின் பதவிகளில் இருக்கும்போது அவர்கள் எதையெல்லாம் முன்னறிவிப்பு செய்து அதனை அமல்படுத்தியிருக்கிறார்கள்? பாஜக ஆட்சி இருக்கும் போது இது வேற ஏதாவது முன்னறிவிப்பு செய்து செயல்படுத்தி இருக்கிறார்களா.?  கச்சை இலங்கைக்கு தரை வார்த்த கொடுக்கும்போது அவர்கள் இங்கு யாரிடமாவது கேட்டார்களா எல்லாம் தானோன்றித்தனமாக அவர்களே முடிவெடுத்த அவர்களை செய்து வருகிறார்கள். உங்களால் என்ன செய்ய முடியும் என்று திமிர்த்தனம் இருக்கிறது. அதுதான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

எங்களுக்கு எல்லாம் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை நீங்கள் பாரத் வையுங்கள் இல்லையென்றால் சூரத் என்று வையுங்கள். நீங்கள் உங்களுடைய நாட்டிற்கு பெயர்  வைத்திருக்கிறீர்கள் அதில் நான் தலையிட முடியாது ஆனால் என் நாடு தமிழ்நாடு. நீங்கள் உங்களுடைய நாட்டிற்கு எந்த பெயரில் வேண்டும் அவர்களுக்கு நீங்கள் இப்பொழுது பாரத் என்றும் வையுங்கள் ஏனென்றால் ஆங்கிலேயர்கள் அவருக்கு இந்தியா என்று பெயர் வைத்ததால் நீங்கள் பாரத் என்று மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நாடு வெள்ளைக்காரர்கள். தேர்தல் வரவுள்ளதால் சிலிண்டர் விலை குறைகிறது, சட்டங்களின் பெயர் மாறுகிறது, சந்திரயான்-3, ஆதித்யா எல்1 ஏவப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வு, ஒரே வரி என்றால் ஒரே நீர் எங்கே? காவிரி நீரை ஏன் எங்களுக்கு பெற்றுத்தர முடியவில்லை? இப்படி இருந்தால் எனக்கு எப்படி நாட்டுப்பற்று வரும். வில்லியம் ஜோன்ஸ் கையெழுத்து திட்டத்தினால் தான் நீங்கள் இந்து. அப்படி என்றால் நீங்கள் அந்த பெயரை மாற்றி விடுங்கள். பாரத் என்றும் பெயர் வையுங்கள் மற்றும் இந்து என்ற பெயரில் மாற்றிவிடு. தற்போது பெயரை மாற்றி விட்டால் நாட்டின் 150 லட்சம் கோடி கடன் உள்ளது அதை தள்ளுபடி செய்து விடுவார்களா.  ஆட்சிக்கு வந்த உடனே பாரத் என்ற பெயர் மாற்ற வேண்டும் ஏனென்றால் தற்போது  நான்கு மாதங்களில் எலக்சன் நடக்க இருப்பதால் நீங்கள் தற்போது பெயரை மாற்றி உள்ளீர்கள்.

-விளம்பரம்-

நீங்கள் இந்துவாக உங்கள் கிருத்துவர்களாக இருங்கள் முஸ்லிமாக இருங்கள் என்னுடைய நாடு தமிழ்நாடு. அவர்களிடம் அதிகாரம் உள்ளது மாநில உரிமையை பேசுகிறார்கள் அவர்களுக்கு அடிமையாகி விட்டனர். இவர்களை ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது ஆதரிக்கிறார்கள். 1971 ஆம் ஆண்டு ஐயா கலைஞர் அவர்கள் இதை ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து பேசினார். தீர்மானம் நிறைவேற்ற நாங்கள் இதை முன்மொழிந்தோம் என்று தற்போது இருக்கிறது. இன்றைக்கா தானே எதிர்க்கிறீர்கள் அப்போ அன்றைக்கு தேவை இன்றைக்கு உங்களுக்கு தேவை இல்லையா. இந்தியா என்பது ஒரே நாடா என்பதை பேசி முடித்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகருவோம்.

நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்டங்களாக நடத்தி உள்ளீர்கள் நான்கு கட்டங்களாக நடத்தி உள்ளீர்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தோற்கடிப்பதற்காக எட்டு கட்டங்களாக அங்கு தேர்தலில் நடத்தினார்கள். தற்போது எப்படி ஒரே நாடு ஒரே தேர்தலாக கொண்டு வருவீர்கள். தேர்தல் ஆணையமே கூறுகிறது இதற்கு முன்பு ஆயிரம் கோடி செலவாகும் என்று அதற்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுபவர்கள் இதனை நடத்துவது மிகவும் கடினம் என்று தேர்தல் அனைவரும் கூறியுள்ளது. என்று சீமான் கூறினார்.

Advertisement