பெயருக்கு பின்னால் இருக்கும் லாரன்ஸ் ஏன் நீக்கப்பட்டது – லாரன்ஸ் அடடே விளக்கம்.

0
2762
Raghava
- Advertisement -

பெயருக்கு பின்னால் இருக்கும் லாரன்ஸ் ஏன் நீக்கப்பட்டது என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இவர் ராகவேந்திர சாமியின் மீது பற்று காரணமாக அவரது பெயரை அவர் மாற்றி கொண்டார். இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது பெயர் ராகவே என்று மட்டுமே இருந்து உள்ளது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்யவே அதற்க்கான விளக்கம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை சினிமா விமர்சகர் விமர்சித்து வருகிறார்.

-விளம்பரம்-

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார்.

- Advertisement -

அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர்களுடன் இந்த படத்தில் நயன்தாரா, வடிவேல் ,நாசர், கே ஆர் விஜயா என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை சிவாஜி புரொடக்சன் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இப்படம் 1999 இல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

சந்திரமுகி படம்:

மேலும், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் சந்திரமுகி 2 இயக்குகிறார். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். இதில் ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

சந்திரமுகி 2 படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த விழா பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்று வந்தது.

ராகவா லாரன்ஸ் அளித்த விளக்கம்:

பலரும் பெயரை அப்படி மற்றியதற்க்கான காரணம் என்னவென்று கேட்டு வந்தார்கள், அது குறித்து பேசிய அவர் எனக்கு நீண்ட நாட்களாகவே பெயரை சுருக்க வேண்டும் என்று ஆசை ஆகையால் தான் அவ்வாறு பெயரை சுருக்கி ராகவா என்று மட்டும் வைத்து இருந்தேன். இந்த விளக்கத்தை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வருகிறார்.    

Advertisement