வயிற்றில் என்ன சுருக்கம் – திருமணம் ஆகாத குமுதாவிடம் ரசிகர் கேட்ட ஏடாகூட கேள்வி. அதற்கு அவர் கொடுத்த விளக்கம்.

0
341
nandita
- Advertisement -

பொதுவாகவே நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள். அதில் அவர்கள் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் பதிவிடுவது வழக்கம். இதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல், விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான். அதில் ரசிகர்கள் நடிகைகளின் புகைப்படங்களை வைரல் ஆக்குவார்கள். அந்த புகைப்படங்களில் ஏதாவது குறை இருந்தால் ட்ரோல், மீம்ஸ் போட்டு விமர்சிப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நந்திதா ஸ்வேதா புகைப்படத்தை ரசிகர்கள் விமர்சித்து கிண்டல் செய்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 123-814x1024.jpg

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்க்கு பிறகு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் என்ற படத்தில் ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா.

- Advertisement -

நந்திதா ஸ்வேதா திரை பயணம்:

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படம் மூலம் தான். இந்த படத்திற்கு பின்னர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நந்திதா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடித்து வருகிறார். கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கிறார் நந்திதா ஸ்வேதா.

நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம்:

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள் சோசியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் பார்ப்பதற்கு குண்டாக இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து விமர்சித்து பதிவு போட்டு இருக்கிறார்கள். அதே போல அந்த புகைப்படத்தில் அவரது வயிற்றில் சில சுருக்கங்கள் இருந்ததை பற்றி ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

வயிற்றில் இருந்த சுருக்கம் குறித்து கேட்ட ரசிகர் :

அதற்க்கு பதில் அளித்த ஸ்வேதா ‘என் வயிற்றில் இருக்கும் சுருக்கங்களை பார்த்து பலரும் கேள்வி கேட்கிறீர்கள். நான் Dhee நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறேன். 6 முதல் 7 மணி நேரம் வரை உட்கார்ந்தே இருக்கிறேன். அதற்கு இடையில் தான் சில போட்டோ ஷூட்களை செய்தேன். அது பாவாடையால் நேர்ந்த கோடுகள் தான். அப்டியே அதே சுருக்கமாகவோ இல்லை காயமாகவோ இருந்தாலும் அதை பற்றி கவலைப்பட தேவை இல்லை ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement