அவனயெல்லாம் சும்மா கூப்டுட்டு போய் 500ரூபா கொடுத்தேன், இன்று அவர்கள் புகழுக்கு போன பின்பு – புகழ் பாலா குறித்து நாஞ்சில் விஜயன்.

0
359
nanjil
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புது புது வித்தியாசமான கான்செப்ட்டில் விஜய் டிவி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறது. நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இருந்தாலும் அதன் மூலம் இவர் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார்.இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இடையில் கூட இவர் சூர்யா தேவி அளித்த புகாரால் சிரைக்கெல்லாம் சென்று வந்தார்.

என்னதான் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் இவரால் இன்னும் சினிமாவில் ஒரு நடிகராக ஜொலிக்க முடியவில்லை ஆனால் இவருக்கு பின்னால் வந்து ஏகப்பட்ட நபர்கள் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் மற்றும் பாலாவும் ஒருவர் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் விஜயனிடம் புகழும் மற்றும் பாலாவின் வளர்ச்சி குறித்து கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த அவர் ”அவர்களின் வளர்ச்சியை கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது புகழும் பாலாவும் வாய்ப்பு தேடி காலத்திலிருந்து பார்த்திருக்கிறேன். புகழ் என்னிடம் நிகழ்ச்சிக்கு செல்லும் போது என்னையும் கூட்டிச்செல்லுங்கள் உங்களுடன் நான் டிரைவிங் வருகிறேன் என்றெல்லாம் கேட்டு இருக்கிறான். அதேபோல பாலா டிவிக்கு வருவதற்கு முன்னர் அவனை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று 500 ரூபாய் எல்லாம் கொடுத்து இருக்கிறேன். அன்று அவனுக்கு அது பெரிதாக இருந்தது. ஆனால், இப்போது மிகப்பெரிய ஒரு புகழுக்கு சென்று விட்டார்கள்.

சில நேரங்களில் ஏன் நாஞ்சில் உனக்கு சரியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதே போல புகழ்,பாலாவிடம் ஏன் நீங்க வாய்ப்பு கேட்கவில்லை என்று கேட்டதற்கு ‘புகழ் பாலா இப்போதும் என் மீது பாசமாக இருப்பார்கள் இப்போது பார்த்தால் கூட கையெடுத்து கும்பிட்டு காலில் விழுவார்கள். நான் அவர்களிடம் வாய்ப்பு கேட்டால் அது அவர்களுக்கு கஷ்டமாகிவிடும் என்று அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் நிறைய பேர் அவர்களிடம் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருப்பார்கள் நாமும் அந்த விடக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

Advertisement