வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு முன்பே அஜித், விக்ரம் என்று 10க்கும் மேற்பட்ட படங்களில் ஓரமாக நடித்துள்ள சூரி.

0
716
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடியன்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்வளவு ஏன் வைகைபுயல் வடிவேலு கூட ஆரம்பத்தில் கௌண்டமணியின் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-

அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார். தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அதிலும் தற்போது விடுதலை படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கௌதம் மேனன் சேத்தன் பவானி என்று பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தன்னுடைய வெகுளித்தனமான நடிப்பின் மூலம் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்திருக்கிறார் சூரி.

அதேபோல விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூரியன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் சூரி மிகவும் பிரபலமானது என்னவோ வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

-விளம்பரம்-

பின்னாளில் இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் கிடைத்தது. ஆனால் வெண்ணிலா கவலைப்படும் திரைப்படத்திற்கு முன்னரே நடிகர் சூரி எண்ணற்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ , ‘தீபாவளி’ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் அவர் துணை நடிகராக நடித்த 10 க்கும் மேற்பட்ட படங்கள் இதோ.

இது மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் கூட மெக்கானிக் செட் ஊழியராக நடித்திருப்பார் நடிகர் சூரி. இப்படி படிப்படியாக முன்னேறி என்று ஒரு நாயகனாக உருவெடுத்து இருக்கும் சூரியன் வளர்ச்சி நிச்சயம் பாராட்டத்தக்கது தான். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement