நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.!

0
2371
Booney-Kapoor

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தயாரிப்பாளராக எண்ரி கொடுத்த போனி கபூர் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

Keerthi

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

இதையும் பாருங்க : எசக்கு பிசக்கான உடல் குறைப்பு சிகிச்சை.! முன்பை விட படு குண்டாக மாறிய நித்யா மேனன்.! 

விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்தார் கீர்த்தி. ஆனால், இவருக்கு தெம்பூட்டும் விதமாக இவர் நடித்த ‘மகாநதி’ திரைப்படதிற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகியுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 19) வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘மைதான்’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

1952 முதல் 1962 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் வாழ்க்கை கதையை தான் ’மைதான்’ என்கிற பெயரில் படமாகவுள்ளனர். இந்த படத்தில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது.