நடிகர் விவேக் மரணம் முக்கிய முன்னுதாரணம் – இனி தடுப்பு போடும் முன் இது கட்டாயம். தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

0
99118
vivek
- Advertisement -

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தோடு தன் நடிப்பின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி அன்று திடீர் மாரடைப்பால் இறந்த செய்தி அனைத்து திரையுலகினர் மட்டுமில்லாமல் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் விவேக் அவர்கள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் கோவிட் தடுப்பு ஊசி போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் மக்களிடையே கோவிட் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தார். ஆனால், மறுநாளே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி விவேக் அவர்கள் இறந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : திடீர் திருமணத்தை முடித்த நாயகி சீரியல் நடிகை – திருமண புகைப்படங்கள் இதோ.

அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார். அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னையே முறையான பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் தான் இவர் இறந்து இருக்கிறார் என்றும் இதை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைவரும் உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் உயிர் இழப்பு எப்படி ஏற்படுகிறது என்பது அப்போது தான் தெளிவாக தெரியவரும்.

-விளம்பரம்-
மகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு.. நடிகர் விவேக்கின் உடல்  தகனம் (படங்கள்)

இதற்கு நடிகர் விவேக் அவர்களின் மரணம் ஒரு முக்கிய உதாரணமாக இருக்கட்டும். மேலும், மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து 8 வாரத்துக்குள் ஒன்றிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement