சுசீந்திரன் என்னை ஏமாற்றி விட்டார் பிரபல நடிகர் நட்டி திடீர் புகார்..!

0
1038
Natty-nagaraj
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பின்னர் கதாநாயகனாக அவதாரமெடுத்தவர் நட்டி நாகராஜ். மிளகாய் படத்தின் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றியதாக பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர்கள். இயக்குனர் சுசீந்திரனும் அவரது மேனேஜர் ஆண்டனியும் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு நான் நடித்திருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சினிமா வட்டாரங்களில் கூறுவது என்னவெனில், நட்டி நாகராஜ் சுசீந்திரன் இயக்கிய ஜீவா படத்தில் ‘ஒரு ரோசா’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஆனால், அதற்கான சம்பளம் இன்னும் தரப்படவில்லை என்று கூறியுள்ளனர் .

-விளம்பரம்-
Advertisement