சூப்பர் டீலக்ஸ் படத்தை கழுவி ஊற்றிய நட்டி.! ஏன் இவ்வளவு காண்டு.!

0
720
Natty
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பின்னர் கதாநாயகனாக அவதாரமெடுத்தவர் நட்டி நாகராஜ். மிளகாய் படத்தின் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் நடித்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தமிழ் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை படு கேவலமாக விமர்சித்துள்ளார் நட்டி.

இதையும் படியுங்க : சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த இந்த நபர் யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.! 

- Advertisement -

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து விமர்சித்துள்ள நட்டி, இந்த படத்தை ஒரு மொக்கை படம் என்றும், அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?… விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன் என்றும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றியதாக பகீர் குற்றச்சாட்டை வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்க்கது.

-விளம்பரம்-

Advertisement