பில்லா பட ஷூட்டிங்கில் நயனை அசிங்கப்படுத்தியுள்ள நமீதா – பேசுவதையே நிறுத்தியுள்ள நயன். அவரே சொன்ன வீடியோ இதோ.

0
1268
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

-விளம்பரம்-

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். என்னதான் இவர் என்ட்ரி கொடுத்த போது பல டாப் நடிகைகள் இருந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தத்தை இவர் மட்டுமே பெற்றார்.

இதையும் பாருங்க : மறைந்த நடிகர் விசுவின் அழகான மூன்று மகள்களை பார்த்து இருக்கிறீர்களா? வைரலாகும் அழகிய புகைப்படம்

- Advertisement -

பிரம்மாண்டமாக நடந்த திருமணம் :

நயன்தாரா, அஜித்தை போல பொது பேட்டிகள் கொடுப்பது, படத்தின் விழாக்களில் கலந்து கொள்ளவது கிடையாது. ஆனால், தனக்கு கொடுக்கும் விருதுகளை மட்டும் நேரில் சென்று வாங்கிக்கொள்வார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், இந்த திருமணத்தில் வேறு எந்த டாப் நடிகைகளும் கலந்துகொள்ளவில்லை.

மற்ற நடிகைகள் குறித்து நயன் :

அவ்வளவு ஏன் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த நயனுடன் இணைந்து நடித்த சமந்தா கூட பங்கேற்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தனக்கும் மற்றும் நடிகைகளுக்கும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்தார். அதில் நமீதா, குறித்து பேசிய போது :-

-விளம்பரம்-

நமீதாவுடனான பிரச்சனை :

பில்லா படத்தில் நடித்தபோது ஆரம்பத்தில் இருவரும் நன்றாகத்தான் இருந்தோம். முதலில் நான் தான் போய் அவரிடம் பேசினேன். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், திடீரென்று அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இருக்கும்போது அவங்க வருவாங்க எல்லாரிடமும் ஹாய் சொல்லுவாங்க, என்னை மட்டும் விட்டுவிடுவார்கள். எனக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை.

நயன்தாரா சொன்ன பதில் :

இருவருக்கும் எந்த சண்டையும் நடக்கவில்லை, எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு தோன்றியது. ஆனால் திடீரென்று அப்படி ஆகிவிட்டது. நானும் அப்படியே விட்டு விட்டேன். மற்றவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் அது அவர்களுடைய பிரச்சனை தானே அதில் நான் ஒன்றும் பண்ண முடியாது’ என்று பேசியுள்ளார் நயன்தாரா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement