மறைந்த நடிகர் விசுவின் அழகான மூன்று மகள்களை பார்த்து இருக்கிறீர்களா? வைரலாகும் அழகிய புகைப்படம்

0
917
visu
- Advertisement -

மறைந்த முன்னணி நடிகர் விசுவின் மகள்களின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்கம், நடிப்பு என இரண்டு துறைகளிலும் முத்திரை பதித்தவர் நடிகர் விசு. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டு இருந்தார். நடிகர் விசு அவர்கள் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன் ஆகும்.

-விளம்பரம்-

இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இதற்குப் பிறகு விசு நடித்த முதல் படம் ரஜினியின் தில்லு முல்லு. அந்த படத்தில் ரஜினியின் டப்பிங் குரலும் விசு செய்து இருந்தார். பின் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

விசுவின் திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் நடிகர் விசு அவர்கள் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் மணல் கயிறு, ரகசியம், புதிய சகாப்தம், மின்சாரம் அது சம்சாரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருந்தார். இவர் கடைசியாக தங்கமணி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Director Visu Reveals Why He Naming Uma To His Heroines

விசுவின் சின்னத்திரைப்பயணம்:

மேலும், இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் இருந்தார். வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்து இருந்ததால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு விசு சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

விசுவின் மரணம்:

இதனால் நடிகர் விசு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து இருந்தார்கள். இதனிடையே விசு கடந்த 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லாவண்யா, சங்கீதா , கல்பனா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் விசுவின் குடும்ப புகைப்படம்:

இந்த நிலையில் விசுவின் அழகிய குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.அதுஎன்னவென்றால், இணையத்தில் முதன் முதலாக மறைந்த நடிகரும், இயக்குனருமான விசு தன் மனைவி, மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. அதை பார்த்த பலரும் விசுவின் மகள்களா இது! என்று கமென்ட் போட்டு புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement