மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா ?காரணம் விஷாலா?

0
11910
prabhunayan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். சமீப காலமாக இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மேலும், சினிமாவில் நயன்தாரா அவர்கள் உச்சத்தில் இருந்தாலும் சோசியல் மீடியாவில் அவரைப் பற்றிய சர்ச்சைகளும் சலசலப்புகளும் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவாவுடன் நயன்தாரா அவர்கள் காதலில் இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இது குறித்து பல சர்ச்சைகள் இருந்தது. பின் அவருடன் பிரேக் அப் ஆனது. இதையடுத்து நடிகர் சிம்புவும், நயன்தாராவும் காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. தற்போது நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். கூடிய விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தனது அடுத்த படத்தில் பிரபுதேவாவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நடிகர் விஷால் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்தார். பின் சில காரணங்களால் இந்த படம் தள்ளி போனது. தற்போது இந்த படத்தை கண்டிப்பாக தயாரித்து ஆகவேண்டும் என்ற உறுதியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருக்கிறார்.

ஆகவே இந்த படத்தில் இருந்து நடிகர் விஷாலை நீக்கி விட்டு படத்தின் வேலைகளைத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பே நடிகை நயன்தாரா அவர்கள் பிரபுதேவா இயக்கத்தில் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement