அவருக்கு என்ன உறுப்பு வேணும்னாலும் சொல்லுங்க தரேன் – கேப்டனுக்காக வெளிநாட்டில் இருந்து கண்ணீருடன் தொழிலாளி வீடியோ.

0
700
- Advertisement -

கேப்டனுக்காக என்னுடைய உடல் உறுப்புகளை தருவேன் என்று குவைத்தில் இருந்து தொண்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் விஜயகாந்த். ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

80 தொடங்கி 2k வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்த் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

தற்போது கட்சியை அவருடைய பெற்று மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில், விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை.

-விளம்பரம்-

ரசிகர்கள் பிராத்தனை:

அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் தீவிர ரசிகரும், தொண்டனுமான ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தொண்டர் வீடியோ:

அதில் அவர், நான் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். நான் குவைத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். கேப்டனின் ரசிகன். அவருடைய உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவருடைய நுரையீரலில் பிரச்சனை இருப்பதாக சொல்கிறார்கள். என்னுடைய கேப்டனுக்கு உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு உறுப்புகள் தேவை என்றாலும், கல்லீரல், நுரையீரல், கிட்னி எதுவாக இருந்தாலும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய கேப்டன் மீண்டும் எழுந்து வர வேண்டும். இந்த தகவலை அண்ணியாருக்கு தெரியப்படுத்துங்கள். எதுவாக இருந்தாலும் நான் கொடுக்க தயார். எந்த பிரச்சனை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னுடைய கேப்டனுக்காக எது வேணாலும் செய்வேன் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.

Advertisement