சிம்பு சபரி மலைக்கு சென்ற அதே நாளில் காதலருடன் கோவிலுக்கு சென்ற நயன். இன்றைய வைரல் வீடியோவே இதுதான்.

0
51203
simbhu-nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்களை விட நடிகைகள் பல வருடங்கள் நிலைத்து நிற்பது எல்லாம் சாதாரண விடயம் அல்ல. அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான காதலில் இருந்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து பின்னர் அவர்களிடம் இருந்து பிரிந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-
nayanthara

அதே போல தற்போது நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார் சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார். மேலும், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி தற்போது நயன்தாரா நடித்துவரும் மூக்குத்தி அம்மன் படக்குழுவினர் ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல நடிகை நயன்தாராவும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரல் ஆனது.

இதையும் பாருங்க : ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்த அஜித்தின் ரீல் தம்பி.

- Advertisement -

இந்தநிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவனுடன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாரா கோவிலுக்கு வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் நயன்தாராவிடம் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர் இதனால் அங்கே கூட்டம் அதிகமானதால் கோவிலில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

View this post on Instagram

Kanyakumari temple ❤️

A post shared by nayanthara (@nayantharah) on

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நயன்தாராவின் முன்னாள் காதலர்களான சிம்பு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதமிருந்ததை அடுத்து இன்று விரதம் முடிந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று இருந்தார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி சிம்பு சபரி மலைக்கு சென்ற அதே நாளில் தனது காதலருடன் நயன்தாரா கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். நேற்று பகவதி அம்மனை தரிசித்த நயன்தாரா இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று சிறப்பு பூஜையை மேற்கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement