பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவர் அத்து மீறி நடந்து கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,ரசிகர்கள் இது குறித்து அத்து மீறிய நபர் மீது பயங்கரமாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகை சாரா அலி கான் வேற யாரும் இல்லைங்க, பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சயீப் அலிகானின் மகன். அதாவது சயீப் அலிகானின் முதல் மனைவியின் மகள் தான். மேலும், தற்போது சலீம் கானின் மனைவி பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஆவார். சினிமா பிரபலங்களை கோவில்களிலோ,பொது இடங்களிலோ சந்திக்கும் போது அவர்களிடம் செல்பி எடுப்பது வழக்கமான ஒன்று. அப்போது கூட்டங்கள் குவியும். இதனால் பிரபலங்கள் பல பேருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
முதலில் எல்லாம் ரசிகர்கள் ஆட்டோகிராப் தான் வாங்குவார்கள். இப்போதிருக்கும் டிஜிட்டல் உலகத்தில் செல்ஃபி எடுப்பது வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் இளைஞர்கள். மேலும் விதவிதமாக செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை பேசிக் கொள்ள நினைப்பவர்கள் பல பேர் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளுடன் எடுத்த போட்டோவை இணையங்களில் போட்டு பயங்கர அலப்பறை செய்து உள்ளார்கள். மேலும், இப்படி சினிமா பிரபலங்களை சூழ்ந்து கொண்டு எடுக்கும் செல்பி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், அந்த மாதிரி சமயத்தில் தான் நடிகர், நடிகைகளுக்கு ஒரு சில ரசிகர்களால் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். தற்போது பாலிவுட் நடிகை சாரா அவர்களுக்கு ஒரு நபரால் பிரச்சனை நடந்து உள்ளது.
இதையும் பாருங்க : கிரிக்கெட் சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய ராதிகாவின் மருமகன். யாருனு பாருங்க.
மேலும், கடந்த ஆண்டு வெளியான ‘கேதார்நாத்’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர். அதற்கு பிறகு நடிகை சாரா அலி கான் அவர்களுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்நிலையில் அவர் படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக வருகிறார். இந்நிலையில் நடிகை சாரா அலி கான் அவர்கள் அண்மையில் தான் விடுமுறைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். பின் நடிகை சாரா அவர்கள் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடி கழித்து விட்டு இரு தினங்களுக்கு முன்பு தான் மும்பை திரும்பினார். மேலும், நடிகை சாரா மும்பை விமான நிலையம் வந்த போது அவருடன் ரசிகர்கள் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார்கள். பின் நடிகை சாரா அவர்கள் ரசிகர்களுக்காக பொறுமையாக நின்று செல்பிக்கு போஸ் கொடுத்து இருந்தார். அப்போது ஒரு ரசிகர் அத்து மீறி சாராவின் இடுப்பில கை வைத்தார்.
இதனால் நடிகை சாரா அதிர்ச்சி அடைந்து உடனே அவரை விட்டு விலகி நின்று அவருடைய செல்பிக்கு போஸ் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தார். மேலும் இது, தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நபரை ரசிகர்கள் அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நபர் செய்த கேவலமான விஷயத்தை வெளிக்காட்டாமல் பொறுமையாக நடந்து கொண்ட நடிகை சாராவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இது போன்று செயல்களில் யாரும் இனிமேல் ஈடுபட வேண்டாம் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.