சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும்,நடிகை நயன்தாரா அவர்கள் தளபதி விஜயின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ளார் . அங்கு தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து உள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும்,நடிகை நயன்தாரா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வரவிருக்கும் ‘தர்பார்’ படத்தை முடித்துவிட்டார். பின் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் வரவிருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. இவ்வளவு பிஸியான செடுலில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அஜித் நடிப்பில் வரவிருக்கும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை நடிகை நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நியூயார்க்கில் சந்தித்து உள்ளார். மேலும், நியூயார்க்கில் அவரை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘வெறுமனே நியூயார்க்’ என்று மட்டும் கமெண்ட் போட்டுள்ளார் நயன். இது குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. இது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்களுக்கு நவம்பர் 18 ஆம் தேதி அதாவது நாளை பிறந்த நாள். இந்த பிறந்த நாளின் மூலம் நயன் அவர்கள் 35 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்க உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது.
இதையும் பாருங்க : இரவு பார்ட்டியில் தெலுங்கு நடிகருடன் குடி போதையில் டிடி உல்லாச நடனமா ? பத்திரிக்கையில் வெளியான ஷாக்கிங் புகைப்படம்.
மேலும், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவிலேயே உள்ளார் என்றும் தெரிய வந்து உள்ளது. மேலும், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாகவே காதலித்து வருவது எல்லாருக்குமே தெரிந்த விஷயம். மேலும், விக்னேஷ் சிவன் வருடம் வருடம் நயன்தாராவின் பிறந்த நாளுக்கு ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து அவரை மகிழ்விப்பார். இந்நிலையில் இந்த வருடம் நியூயார்க்கில் தன்னுடைய காதலி நயன்தாராவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளார் என்று தெரிய வருகிறது. மேலும், இந்த வருடம் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா பிறந்த நாள் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் இப்போது இருந்தே சமூக வலைத்தளங்களில் நயன்தாரா பிறந்த நாள் குறித்து வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும், இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என இணையங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து இவர்கள் கூட இந்த வருடமே திருமணம் செய்து கொள்வதாக உள்ளோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால், இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. இந்நிலையில் நயன்தாரா பிறந்த நாளின்போது தான் அவர்களுடைய திருமணம் தேதியை அறிவிப்பார்களா!! என்று ஆவலுடன் உள்ளனர் ரசிகர்கள். ஏனென்றால் நயன்னுக்கு இந்த பிறந்த நாளிலுருந்து 35 வயது ஆகிறது. மேலும்,அவருக்கு வயது ஆகி கொண்டே போகிறது என்றும் கூறுகிறார்கள்.