நயனின் முன்னாள் காதலர் சிம்பு செய்த அதே விஷயத்தை செய்துள்ள விக்கி. என்னனு பாருங்க.

0
94874
simbu-nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்களை விட நடிகைகள் பல வருடங்கள் நிலைத்து நிற்பது எல்லாம் சாதாரண விடயம் அல்ல. அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான காதலில் இருந்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து பின்னர் அவர்களிடம் இருந்து பிரிந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

அதே போல தற்போது நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார் சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார். மேலும், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி தற்போது நயன்தாரா நடித்துவரும் மூக்குத்தி அம்மன் படக்குழுவினர் ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல நடிகை நயன்தாராவும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரல் ஆனது.

இதையும் பாருங்க : என்னோடைய அந்த படத்தை பார்த்துவிட்டு 10 கொலை செய்த நபரை சிறையில் சந்தித்தேன் – நடிகர் மோகன்.

- Advertisement -

சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடிகை நயன்தாரா ஜீ சினி விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எப்போதும் இதுபோன்ற விழாக்களில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்வார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் அவர் தனியாக வந்திருந்ததால் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மோதல் ஏற்பட்டு விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் மீண்டும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

Image result for simbu sabarimala

-விளம்பரம்-

இந்த நிலையில் நயன்தாராவின் இந்நாள் காதலரான விக்னேஷ் சிவன் சமீபத்தில் கும்பகோணத்தில் சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சாமியே சரணம் ஐயப்ப விரைவில் மஹரஜோதி தரிசனம் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் நயனின் முன்னாள் காதலரான சிம்பு சபரி மலைக்கு மலை போட்டு விரதமிருந்து சபரி மலைக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement