என்னோடைய அந்த படத்தை பார்த்துவிட்டு 10 கொலை செய்த நபரை சிறையில் சந்தித்தேன் – நடிகர் மோகன்.

0
6909
mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மோகன். இவரை வெள்ளி விழா நாயகன், மைக் மோகன், புகழ்பெற்ற கோலிவுட் நடிகர் என்று தான் அழைப்பார்கள். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். ஆனால், இவர் இந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு காரணம் தமிழ் திரைப்படங்கள் தான். இதுவரை தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சை கிள்ளாதே’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி, மனைவி சொல்லே மந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:40 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், 80பது காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இதன் பிறகு தான் அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புகழின் உச்சியில் இருந்த மோகன் திடீரென்று தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். நடிகை ஒருவர் இவர் மீது காதல் வயப்பட்டார். அவரிடம் தன்னுடைய காதலையும் கூறினார். ஆனால், நடிகர் மோகன் அவர்கள் அவருடைய காதலை மறுத்து விட்டார்.

இதையும் பாருங்க :டேய் தமிழ் இயக்குனர்களா . இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க. தர்பாரை கழுவி ஊற்றிய IAS அதிகாரி.

இதனால் கடும் கோபம் அடைந்த அந்த நடிகை, மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக வதந்தியை பரப்பி விட்டார். இதனால் மோகனின் திரை வாழ்க்கை கேள்விக்குறியானது. இதனால் நடிகர் மோகன் விரக்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடைய வீட்டை விற்று விட்டு சென்று விட்டாராம். ஆனால், தற்போது அவருக்கு 61 வயது ஆகிறது. இன்னும் நன்றாக ஆரோக்கியமாக உள்ளார். இந்த நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து நடிகர் மோகன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

-விளம்பரம்-
Related image

அதில் அவருடைய ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதில் நடிகர் மோகன் கூறியது, என்னுடைய பாடல்கள் எல்லாம் காதல் வெற்றிக்கும் பயன்பட்டது, காதல் தோல்விக்கும் பயன்பட்டது என்று சொல்லுவார்கள். அதுமட்டுமில்லாமல் என்னுடைய நூறாவது நாள் படத்தை பார்த்த ஒருவர் அதனால் இன்ஸ்பெயர் ஆகி பத்து கொலைகளை செய்து ஜெயிலுக்கு சென்று உள்ளார். அப்போது நானும் ஒரு நிகழ்ச்சிக்காக ஜெயிலுக்குப் போய் இருந்தேன். அங்கு அவர் நான் உங்களை தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பின் அவர் நான் வெளியே வந்து உடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறினார்.

Advertisement