தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நம்ம தலைவர் ரஜினிகாந்தின் “தர்பார்” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. மேலும், நயன்தாரா அவர்கள் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து இருந்தார். மேலும் ,பிகில் படத்தின் பிரமோஷன், பூஜை, ஆடியோ ரிலீஸ் என எந்த ஒரு பங்ஷனில் கலந்து கொள்ளாமல் படக்குழுவினர் முகத்தில் கரியைப் பூசினார். இதே போன்று தற்போது தர்பார் பட பூஜையிலும் பங்கேற்காமல் தவிர்த்து உள்ளார். இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எல்லாரும் பயங்கர கடுப்பாகி உள்ளார்கள் என்ற தகவல் வந்து உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக லேடி சூப்’பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் கூறி உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் தர்பார் படத்தில் வெளியான சும்மா கிழி” என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்தது.
இதையும் பாருங்க : எதுக்கு என்கவுன்டர் ? இப்படி பண்ணி இருக்கலாமே. அனைவரும் கொண்டாடிய விசயத்துக்கு ரித்விகா போட்ட பதிவு.
அது என்னவென்றால் ஐயப்பன் சாமி பாடல் டியூணில் இருந்து தான் இந்த பாடல் உருவானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பாடல் யூடியூப்களில் முதலிடம் பிடித்து வந்தது. இந்த நிலையில் இன்று தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பேர் கலந்து கொண்ட்டார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான அளவில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் வருவதால் நயன்தாரா அவர்கள் பங்கேற்பார் என்று ரசிகர்களும் பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நயன்தாரா அவர்கள் தனக்கென ஒரு கொள்கையை கொண்டுள்ளார்.
மேலும், நயன்தாரா அவர்கள் பூஜை, பிரமோஷன் என பல்வேறு நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்திருந்தார். இந்நிலையில் படத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்ததால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எல்லாரும் பயங்கர கடுப்பாகி உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் எப்படியாவது வந்திருந்த மேடம் என்றார் ஏ.ஆர்.முருகதாஸ் கோரிக்கை வைத்து உள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நயன்தாரா அவர்கள் மீது தளபதி ரசிகர்களுடன் , சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் கோபத்தில் உள்ளார் என்று தெரிய வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா குறித்து பல விமர்சனங்களை எழுதி வருகிறார்கள்.