பாலிவுட்டா இருந்தா என்ன, ஷாருக்கா இருந்தா என்ன, எல்லாருக்கும் ஒரு Rules தான் – மாஸ் காட்டிய நயன்.

0
1285
Nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகைகளில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதிக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் நயன்தாரா தான் முதல் இடம்.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் லீடு ரோல்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அஜித்தை போல நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சகளில் கலந்துகொள்வது இல்லை என்றாலும் விருது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வார். நடிகையாக மட்டுமல்லாமல் நயந்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த தயாரிப்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். மேலும், லீட் ரோலில் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தனது சொந்த தயாரிப்பில் தான் வெளியிடுகிறார் நயன். அதனாலேயே தன் சொந்த தயாரிப்பில் வெளியாகும் தன்னுடைய படங்களுக்கு முட்டும் Promtionல் கட்டாயம் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் நயன்தாரா இந்தியில் ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார்.

அட்லீ இயக்கி இருக்கும் இந்த படத்தின் ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இதுதான் நயன்தாராவின் முதல் இந்தி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் என்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த விழாவில் நயன்தாரா கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானதுடன் தென்னிந்திய பட ப்ரோமோஷன்களின் கலந்துகொள்ளாத நயன் பாலிவுட் பட ப்ரோமோஷன்களில் மட்டும் கலந்துகொள்வதாக என்று விமர்சனங்கள் எழுந்து. ஆனால், இந்த விழாவில் நயன் கலந்துகொள்ளவில்லை. இறுதியாக நயன்தாரா லீட் ரோலில் நடித்த நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷனுக்காக டிடியுடன் ஒரு பேட்டியை அளித்து இருந்தார்.

அப்போது ஏன் ஹீரோயின்களுக்கு மட்டும் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத போலவே இருக்கிறது என்று எனக்கு தோன்றி இருக்கிறது. ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றால் கூட எங்காவது ஒரு ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக நம்மைப் பற்றி சொல்வார்கள். எந்த விதத்திலும் நமக்கு ஒரு முக்கியத்துவம் இருக்காது. அதனால் தான் நான் எந்த ஒரு பிரமோஷனுக்கும் போகாமல் இருக்க காரணம். அந்த இடத்திற்கு வந்த பின்னர் செல்லலாம் என்று நினைத்து அதன் பின்னர் நான் எந்த ஒரு பிரமோஷனுக்கும் செல்வதையே விட்டு விட்டேன்’ என்று கூறி இருந்தார் நயன்தாரா.

Advertisement