அன்று ஜெயிலர் மேடை இன்று ஜவான் மேடை – மற்ற ஹீரோ பட விழாக்களிலும் கொண்டாடப்படும் விஜய்யின் புகழ்.

0
1004
ATlee
- Advertisement -

விஜய் குறித்து ஜவான் பட ப்ரீ ரிலீஸ் ஈவன்டில் அட்லீ பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

விஜய்-அட்லீ படம்:

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

ஷாருக்கான்-அட்லீ படம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அன்று ஜெயிலர் இன்று ஜவான் :

இந்தப் படம் நடக்க ஒரு முக்கியமான காரணம் யார் என்றால் என்னுடைய அண்ணன் என்னோட தளபதி விஜய் சார். என்னுடைய வாழ்க்கை ராஜா ராணியில் ஆரம்பித்தது அப்படியே தெரி மெர்சல் பிகில் என்று வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது மிகவும் ஒரு comfort zoneல் இருந்தேன். அப்போது ஒரு படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது அப்போது நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் டேய் நீ கண்டிப்பா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது இந்த படத்தை நீ பண்ற என்று சொன்னார். அவர் கொடுத்த அந்த மொடிவேஷன் தான் நான் என் comfort zone இல் இருந்து வந்தேன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பிரிவியூ வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில் இந்த வீடியோவில் வரும் சில காட்சிகளை அந்நியன், பாகுபலி, வலிமை என்று பல்வேறு படங்களில் வரும் காட்சியை போல இருக்கிறது என்று கேலி செய்துவந்தனர். இதுவரை அட்லீ இயக்கிய தமிழ் படங்கள் காபி சர்ச்சையில் சிக்கிய நிலையில் பாலிவுட் சென்றாலும் காபி சர்ச்சை அட்லீயை விடாமல் துரத்துகிறது.

Advertisement