கமல், சூர்யா, தனுஷையே மிஞ்சிய நயன். கொரோனா பாதிப்பிற்கு கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா ?

0
122298
nayanthara
- Advertisement -

ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. கொரோனா வைரசினால் உலகம் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 290்2 பேர் பாதிக்கப்பட்டும், 68 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். தமிழகத்தை பொறுத்த வரை இதுவரை 411 நபருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

-விளம்பரம்-

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினகூலி நம்பி வாழும் மக்கள்களுக்கு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : விஜய பாஸ்கர் சில நாள் பேட்டிகொடுக்காமல் போனததற்கு காரணம் இந்த 7 ஆம் அறிவு மீம் தானா?

- Advertisement -

இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள். இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதியே பல்வேறு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளள்து .சினிமா ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா நடிகர்களுக்கு உதவி கோரியுள்ளது.

கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி அளித்திருந்தனர். ரஜினி 50 லட்சம் ரூபாயும், கமல் 10 லட்ச ரூபாயும்,விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், சூர்யா-கார்த்தி குடும்பம் 10 லட்சம் ரூபாயும் வழங்கினர். அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் அரிசி மூட்டைகளை அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ்நாடு சினிமா தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

-விளம்பரம்-

கோடிகளில் சம்பாதிக்கும் நயன்தாரா 20 லட்சம் தான் கொடுத்தாரா என்று விமர்சனம் ஒரு புறம் எழுந்தாலும் , தமிழில் உள்ள முன்னணி நடிகைகள் சிலர் கொரோனா குறித்து வாயை திறக்காமல் இருக்கும் நேரத்தில் ஒரு முதல் நடிகையாக நயன்தாரா பலருக்கும் முன் உத்தரமான தான் திகழ்கிறார் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. இதனால் நயன்தாராவிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

Advertisement