சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இதுவரை 290்2 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும்,68 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவினால் நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் , தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது.
தமிழகத்தை பொறுத்து வரை இதுவரை 411 நபருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை சுகாதார துறை அமைச்சரான விஜய பாஸ்கர், இந்த கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த நாளில் இருந்து பம்பரமாய் சுழன்று வந்தார். தமிழ்நாட்டு மக்களின் ரசிகராக மாறினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும், இவரை மீம் கிரியேட்டரகளும் சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளி வந்தனர்.
மேலும்,மக்கள் மத்தியிலும் அடடா, இப்படி ஒரு அமைச்சரா என்று புகழாரம் சூட துவங்கினர். அமைச்சர் மட்டுமல்லாமல் இவர் டாக்டர் என்பதால் கொரோனா குறித்து தெளிவான விளக்கங்களை மக்களுக்கு பேட்டிகள் மூலம் கூறி வந்தார். அதுமட்டுமல்லாமல் சமூக வளைத்ததில் கூட ஆக்டிவாக இருந்து வந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், கடந்த சில தினங்களாக விஜய் பாஸ்கர் இவர் கொரோனா குறித்து எந்த பேட்டியையும் கொடுப்பதில்லை. இவருக்கு பதிலாக தான் தமிழக்தில் கொரோனா குறித்த தமிழக அரசின் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் அப்டேட்டுகளை அளித்து வருகிறார்.
ஆனால், திடீரென்று அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா குறித்த பேட்டிகளை அளிக்காதது ஏன் என்று சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்ப துவங்கினர். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை வெளியிட்ட வீடியோவில் சமூகவலைதளத்தில் விஜயபாஸ்கர் குறித்து வெளியான ஒரு குறிப்பிட்ட மீம் தான் அ தி மு- கவை சேர்ந்த பல்வேறு மூத்த நபர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவில் 3 நிமிடத்தில் பார்க்கவும்
விஜயபாஸ்கரின் செயல்களைப் பாராட்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வெளியாக இருந்தது அதில் குறிப்பிட்ட ஒரு வீடியோவில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் போதிதர்மரை விஜயபாஸ்கராக சித்தரித்து, தமிழ்நாட்டு குழந்தைகளை அவர்தான் காப்பாற்றுகிறார் என்பது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது, மேலும் அந்த குறிப்பிட்ட வீடியோமீமில் தமிழகத்தை என்னால் ஏன் தாக்க முடியவில்லை என்று கொரோனா தனது குருவிடம் கேட்க, அதற்கு அந்த குரு, அது விஜயபாஸ்கரின் மாநிலம் என்று கூறுகிறார்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கை வெளியிட்ட வீடியோவில் விஜயபாஸ்கர் குறித்து வெளியான அந்த குறிப்பிட்ட வீடியோ மீமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்த்து கோபப் பட்டதாகவும், மேலும், விஜய பாஸ்கர் தான் தமிழகத்தில் முதலமைச்சரா என்று எடப்பாடி கோபப்பட்டதாகவும். இதனால்தான் விஜயபாஸ்கர் பேட்டிகளை கொடுக்காமல் இருக்கிறார் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.