சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரரான ராதாரவி நடிகை நயந்தாராவை பற்றி தரக்குறைவாக பேசியது கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுதிர் காலம் திரைப்பட முன்னோட்ட வீடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதா ரவி, நயன்தாராவை மிகவும் தரக்குறைவாக பேசினார். “நயன்தாரா ஒரு பக்கம் பேயாவும் நடிக்கிறாங்க மறுபக்கம் சீதாவாவும் நடிக்கிறாங்க. யார் வேணும்னாலும் சாமி வேஷம் போடலாம், பார்த்த ஒடனே கும்மிடுறவங்களும் போடலாம் பார்த்த ஒடனே கூப்பிடுறவங்களும் போடலாம்.” என்பது போன்ற பல தவறான வார்த்தைகளை ராதாரவி பயன்படுத்தி இருப்பார்.
ராதாரவியின் இந்த தவறான பேச்சுக்கு பல திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதோடு இல்லாமல் திமுக கட்சியில் இருந்து அவரை இடை நீக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ராதா ரவியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்
ஐரா படத்தின் ஸ்னீக்பீக் இன்று வெளியானது. அந்த வீடியோ ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும்வகையில் அமைந்து இருக்கு என்று இணையதளவாசிகள் கமெண்ட் செய்துள்ளனர்.
A moment from #Airaa! #LadySuperstar #Nayanthara pic.twitter.com/N3cZ6xLRXF
— KJR Studios (@kjr_studios) March 24, 2019