நான் இப்போது மறு ஜென்மம் எடுத்து உள்ளேன் – மெர்சல் பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிலை.

0
37754
- Advertisement -

1976 ஆம் ஆண்டு சினிமா உலகில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்த ராம நாராயணன் அவர்களால் தொடங்கப்பட்டது இந்த தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் முரளி ராமசாமியும், அவருடைய மனைவியும் தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர். பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து உள்ளார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான தளபதி விஜயின் மெர்சல் படத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூல் சாதனையும் படைத்தது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் மெர்சல். இந்த படத்தில் விஜய், எஸ் ஜே சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். பாக்ஸ் ஆபீஸில் கூட இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் விஜய் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : கைகூடாத நடிகையாகும் கனவு. படுக்கையறையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட ஜி வி பிரகாஷின் தங்கை.

- Advertisement -

மெர்சல் படத்திற்கு பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. சமூக வலைத்தளத்தில் மெர்சல் படத்தினால் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நிறைய பணம் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தான் படம் தயாரிக்கவில்லை என்று பல சர்ச்சைகள் எழுந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அவர்களுக்கு கடுமையான உடல் நிலை குறைவு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு உள்ளார் என்ற தகவல் தெரிய வந்து உள்ளது.

இது குறித்து பார்க்கையில் ஹேமா ருக்மணி அவர்களுக்கு பொதுவாகவே கடல் உணவு வகைகள் ஒத்துக் கொள்ளாதாம். இதனால் இவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து உள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு திருமண விருந்து விழாவில் இவர் கலந்து உள்ளார். அப்போது ஹேமா ருக்மணி அவர்கள் கடல் உணவு வகைகளை தவறுதலாக சாப்பிட்டு விட்டார். இதனால் இவருக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள். பின் தீவிர சிகிச்சை கொடுத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அவர்கள் நலமாக உள்ளார். இது குறித்து ஹேமா ருக்மணி அவர்கள் “நான் இப்போது மறு ஜென்மம் எடுத்து உள்ளேன்” என்று வில் சக்கர வண்டியில் இருந்த படி ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் ஹேமா ருக்மணி சீக்கிரம் குணமடைய வேண்டுமென கூறி வருகின்றனர். நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement