இத மறைக்க தான இப்படி ஒரு டிராமா ? இரவில் கொட்டும் மழையில் நயன் – விக்கி செய்த செயலை கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
830
nayanthara
- Advertisement -

கொட்டும் மழையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா செய்த செயலின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.தற்போது நயன் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஷாருக்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

இதுதான் நயன்தாராவின் முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். வாடகை தாய் மூலம் தான் இவர்கள் குழந்தை பெற்றார்கள் என்பது தெரிய வந்தது. மேலும், இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் நயன் தங்களின் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்து இருப்பதாக அறிவித்தனர். இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல்வளத்தூரில் இருக்கும் தங்களுடைய குலதெய்வ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

-விளம்பரம்-

நயன்தாரா- விக்னேஷ் சிவன் வந்ததை அறிந்து ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சாமி கும்பிட்டும் கொண்டிருக்கும் போது வெளியில் இருந்த சிலர் தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். பின் விக்னேஷ் சிவன் சில நிமிடங்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டார். இதை கவனித்த நயன்தாரா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாதியில் வெளியில் வந்து உங்களுக்கு சாமி கும்பிடனுமா? வாங்க உள்ள வாங்க, சாமி கும்பிட தானே வந்திருக்ககோம். நாங்களும் தான் என்று கடுப்பாகி பேசிவிட்டு பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்றார்.

இதனை தொடர்ந்து வேறு ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார் நயன். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த போது அங்கு இருந்த சில கல்லூரி மாணவிகள் நயனை சூழ்ந்து போட்டோ எடுத்தனர். அப்போது நயன் பின்னால் இருந்த ஒரு மாணவி நயன் தோளில் கைவைத்தார். இதனால் சட்டென திரும்பி ஒரு கனம் பார்த்த நயன்தாரா பின்னர் எரிச்சலடைந்த முகத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.

பின்னர் அங்கிருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு சென்றார் நயன். அங்கு நயன்தாராவை கண்ட ரசிகர்கள் பலர் செல்போனில் படம் எடுத்துக்கொண்டனர். ரசிகர்கள் கூட்ட நெரிசலில் எப்படியோ ரயிலில் ஏறினார் நயன். அப்போது அங்கு இருந்த 2k கிட்ஸ் சிலர் நயனுடன் செல்ஃபி எடுத்தனர். இதனால் கடுப்பான நயன் ‘இன்னோரு தடவ போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்’ என்று எச்சரித்தார். இப்படி சென்ற இடமெல்லாம் 2k கிட்ஸ் தொல்லையால் கடுப்பாகி போனார் நயன்.

இப்படி ஒரு நிலையில் இரவில் கொட்டும் மழையில் சாலையில் இறங்கி சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு விக்னேஷ் சிவன் – நயந்தாரா உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் ஒரு கையில் பை ஒன்றை ஏந்தியபடியும், மற்றொரு கையில் குடை பிடித்தபடியும் செல்கிறார். உடன் டி-சர்ட் மற்றும் பேஷனான ஜீன்ஸ் பேண்ட் உடையில் நயன்தாராவும் சில பைகளை சுமந்தபடி செல்கிறார்.

இதன்பின்பு, சாலையோரம் நின்றிருந்த நபர்களுக்கு உணவு பைகளை வழங்குகின்றனர். இந்த வீடியோ வைரலானதும், அவரது ரசிகர்கள் இந்த ஜோடியின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர். விமர்சனங்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களிடம் நடந்து கொண்டதை மறைக்கவே இப்படி ஒரு டிராமாவா என்றும், செல்லும் இடமெல்லாம் கேமரா மேன் எப்படி வருகிறார் என்றும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement